
தேங்காய் எண்ணெய் தலைமுடிகளுக்கு மட்டுமின்றி உடலுக்கும் இந்த எண்ணெய் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. ஆயுர் வேதத்தில், தென்னை மரத்தை "கல்ப விருக்ஷா" என்கிறார்கள். இதற்கு வாழ தேவையான எல்லாவற்றையும் தரும் மரம் என பொருள். தேங்காய் எண்ணெய் சுவை நன்றாக இருக்கும். குளிர்ச்சியானதும் கூட.
இதுமட்டுமின்றி காலையில் குடிக்க வேண்டிய ஆரோக்கிய டானிக் என்றும் சொல்லலாம். தினமும் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என இங்கு காணலாம்.
மனநிலை மேம்பாடு:
தேங்காய் எண்ணெயை காலையில் எடுத்து கொள்பவர்கள் நிதானமாகவும், பதற்றம் குறைவாகவும் இருப்பார்கள். இதில் பல்வேறு நரம்பியல் நன்மைகள் உள்ளன. தேங்காய் எண்ணெயில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் உங்களுடைய மனநிலையை மாற்றும். இதனால் நிம்மதியான உணர்வு ஏற்படும்.
புத்துணர்வு:
மற்ற எண்ணெய்களை போல கொழுப்புகளுடன் கனமான உணர்வை தராமல் ஆற்றல் அளவை அதிகரிக்க இந்த எண்ணெய் உதவுகிறது. காலையில் தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்பவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். நாள் முழுவதும் நீடித்த ஆற்றலோடு இருக்க உதவுகிறது.
ஹார்மோன்கள் சமநிலை:
தேங்காய் எண்ணெய் உற்சாகமாக இருக்க ஆற்றலை தருகிறது. சீரற்ற தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்த உதவும். உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி வளர்ச்சியை ஊக்குவிக்கும். தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தனித்துவமான பண்புகளை உடையவை. இதன் காரணமாக செரிமானம் பிரச்சனை இருக்காது. இவை விரைவில் ஆற்றலாக மாற்றப்படும். நம் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும் தேங்காய் எண்ணெய் உதவும்.
சரும பராமரிப்பு:
உலர்ந்த சருமத்தை ஈரப்பதமாக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது. சேதமடைந்த சருமத்தை மேம்படுத்தவும் தேங்காய் எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலும் ஆயுர்வேத மசாஜ்களில் இதை பயன்படுத்துவார்கள். தேங்காய் எண்ணெயில் உள்ள சில பண்புகள் சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.
இதையும் படிங்க: Beauty Tips : ஓரே இரவில் முக பரு மறைய தேங்காய் எண்ணெயுடன் 'இத' கலந்து முகத்தில் தடவினால் போதும்!
நோய் எதிர்ப்பு:
தேங்காய் எண்ணெயில் உள்ள ஆண்டிமைக்ரோபியல், ஆன்டிவைரல் பண்புகள் நோய்களை எதிர்க்க உதவுகிறது. ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க உதவும். வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும். தினமும் காலையில் ஆயில் புல்லிங்கிற்கு செய்ய இந்த எண்ணெயினை பயன்படுத்தலாம். வாய் சுகாதாரம் தான் நோயெதிர்ப்பு சக்தியுடன் தொடர்புடையது.
ஆயில் புல்லிங்;
தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் வாயில் ஊற்றி 10 நிமிடங்கள் தொடர்ந்து கொப்பளித்து விட்டு துப்பவும். இப்படி செய்வதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வெளியேறும். இந்த ஆயில் புல்லிங் பற்களில் உள்ள தேவையில்லாத அழுக்குகளை நீக்கிவிடும்.
எப்படி குடிக்கலாம்?
தேங்காய் எண்ணெய் குடிப்பதால் கல்லீரலும், குடலும் ஆரோக்கியமாக இருக்கும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மிதமான சூடுள்ள நீரில் தேங்காய் எண்ணெயை கலந்து குடிக்கலாம். இப்படி நாள்தோறும் காலையில் தேங்காய் எண்ணெய் வெந்நீருடன் குடிப்பதால் குடித்தால் உடல் எடை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
தேங்காய் எண்ணெயின் நன்மைகளை பெற தினமும் 1 ஸ்பூன் எண்ணெயை குடிக்கலாம்.
இதையும் படிங்க: 1 சொட்டு தோங்காய் எண்ணெயை உடலில் இந்த 3 இடத்தில் விடுங்க.. அதிசயத்தை பாருங்க..