Monsoon Pregnancy Diet : கர்ப்பிணிகளே! இது தெரியாம மழைநேரத்தில் பழங்கள் சாப்பிடாதீங்க; ரொம்ப டேஞ்சர்

Published : Nov 27, 2025, 04:12 PM IST

மழைக்காலத்தில் கர்ப்பிணிகள் ஆரோக்கியத்த்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

PREV
15
Rainy Season Diet For Pregnant Women

கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் அற்புதமான மற்றும் மிக மிக முக்கியமான காலம் ஆகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களது ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக மழைக்காலத்தில் கூடுதல் கவனம் தேவை. இதற்கு மழைக்காலத்தில் சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். எனவே, மழைக்காலத்தில் கர்ப்பிணிகள் அப்படி எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்று இங்கு பார்க்கலாம்.

25
பழங்களை இப்படி சாப்பிடாதே!

மழைக்காலத்தில் கர்ப்பிணிகள் பழங்களை தவிர்க்க வேண்டிய தேவையில்லை. அது சத்தானது தான். ஆனால் அதை பகல் நேரத்தில் சாப்பிடுவது தான் பாதுகாப்பானது. பழங்களை சாப்பிடுவதற்கு முன் உப்பு தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு பிறகு கழுவி சாப்பிடவும். பழங்களை பிரிட்ஜில் வைத்து ஒருபோதும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அவற்றில் பாக்டீரியாக்கள் உருவாகி வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே பழங்களை எப்போதுமே வெட்டியவுடனே சாப்பிடுங்கள்.

35
வெளி உணவுகள் வேண்டாம்!

மழைக்காலத்தில் கர்ப்பிணிகள் கண்டிப்பாக வெளிப்புற உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். மழைக்காலத்தில் அவை இன்னும் குறைய ஆரம்பிக்கும். எனவே பீட்சா, பர்கர், சாண்ட்விச், ஐஸ்கிரீம், சோடா, குளிர் பானங்கள் போன்ற எந்தவொரு உணவுகளையும் சாப்பிடக்கூடாது. வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுவது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதுவும் சூடாக, பழைய உணவுகள் அல்ல.

45
இறைச்சிக்கு நோ சொல்லுங்க...

கர்ப்ப காலத்தில் மீன், இறைச்சி போன்ற புரதம் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது அவசியம். ஆனால் மழைக்காலத்தில் இந்த வகையான உணவுகள் சாப்பிடுவதில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். எனவே பிரஷ்ஷான இறைச்சியை பயன்படுத்தவும். அதை நன்கு வேக வைத்து சாப்பிடவும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

55
நினைவில் கொள் :

- மழைக்காலத்தில் கர்ப்பிணிகள் நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியம். எனவே அடிக்கடி சூடான நீரை குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள்.

- காபி டீ போன்ற பானங்களை தவிர்க்கலாம் அல்லது விதமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

- சூடாக சூப் குடிக்கலாம்.

- அதிக எண்ணெயில் பொரித்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிடலாம். இது தவிர உப்பு, காரம் போன்றவற்றை குறைத்துக் கொள்வது பாதுகாப்பானது.

- சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா, சுவாச பிரச்சனை, இதய போன்ற பிரச்சனை உள்ள கர்ப்பிணிகள் மழைக்காலத்தில் மருத்துவர் ஆலோசனையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

- குறிப்பாக மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த ஒரு மருந்து மாத்திரைகள் எடுக்கக் கூடாது.

- இவை தவிர நல்ல தூக்கம், மன அழுத்தமின்மை, ஆரோக்கியமான உணவு முறை ஆகியவையும் மிகவும் அவசியம்.

Read more Photos on
click me!

Recommended Stories