Published : Aug 05, 2022, 10:19 AM ISTUpdated : Aug 05, 2022, 11:20 AM IST
Hair Care Tips: பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய், உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி தலைமுடி நெடுநெடுன்னு வளர உதவியாக இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா..? எனவே, நெய்யை நம் தலைமுடியில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு பார்ப்போம்.
பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இருபாலருக்கும் தனது அழகை மெருகேற்றிக் காட்டுவதே அவர்களின் தலைமுடிதான். ஆனால், தற்போது மன அழுத்தம், தண்ணீர் மாறுதல், மாசு உள்ளிட்ட காரணங்களால் முடி அதிகமாக கொட்டி விடுகிறது. அதிலும், பல பேருக்கு 30 வயதை எட்டுவதற்குள் கூந்தல் வளர்ச்சியில் கூந்தல் நுனி பிளவு, கூந்தல் உடைப்பு, முனைகள் மெலிந்து போவது, முடி உதிர்வது போன்ற பிரச்சனைகளும் உருவாக கூடும்.இவற்றிற்கு நீங்கள் உங்கள் கூந்தலை பராமரிக்கும் போது, நடக்கும் சில தவறுகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
குறிப்பாக, குளிர்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால், சருமத்தை போலவே ஸ்கேல்ப்பும் வறண்டுவிடும். நெய் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும். நெய் நமது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நமது தோல், சருமம் ஆகியவற்றிற்கும் முக்கியமானது. இது கூந்தலுக்கு தேவையான ஈரப்பதம் மற்றும் நீரேற்றத்தை வழங்குகிறது.எனவே, உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், நறுமணமாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு தேவையான எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
35
Hair Care Tips:
கூந்தலுக்கு ஆரோக்கியமான நெய்:
நெய் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் டி போன்ற சில அத்தியாவசிய வைட்டமின்களின் வளமான மூலமாகும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, முடி உதிர்வை குறைக்க உதவுகிறது மற்றும் உங்கள் உச்சந்தலையில் நன்கு ஊட்டமளிப்பதை உறுதி செய்யும். இது உங்கள் முடி இழைகளின் மந்தமான தன்மை மற்றும் கடினத்தன்மைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இது ஓரிரண்டு முறை பயன்படுத்தும் போதே, உங்கள் சேதமடைந்த முடிகளை ஊட்டமளித்து, ஈரப்பதமாக்குகிறது.
எண்ணெய்க்கு மாற்றாக நெய்யைப் பயன்படுத்தலாம். எண்ணெய்க்குப் பதிலாக, இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவு சூடான நெய் எடுத்து இரண்டு துளிகள் தேனுடன் கலந்து உங்கள் தலைமுடி முழுவதும் மாஸ்க் போல தடவவும். சிறிது நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
55
Health Tip
தேன் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது, இது நெய்யுடன் இணைந்து சிறந்த முடிவுகளைக் காட்டுகிறது. நெய்யில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. மேலும், தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உங்கள் தலைமுடியை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.