குழந்தைகள் படிக்காமல் அடம்பிடிக்குறாங்களா? இதை செய்ங்க தன்னால படிப்பாங்க

Published : Jun 20, 2025, 03:23 PM IST

குழந்தைகளை கண்டிக்காமல், திட்டாமல் ஆர்வமாக படிக்க வைக்க சிறந்த வழிகளை இங்கு காணலாம்.

PREV
17
Parenting Tips

பள்ளி விட்டு வரும் குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும் டிவி பார்ப்பது, விளையாட செல்வது, போன் பார்ப்பது என எதிலாவது பிஸியாகிவிடுவார்கள். ஆனால் கையில் புத்தகத்தை மட்டும் எடுப்பதே இல்லை. இது பெற்றோருக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது. இப்படி படிக்காமல் இருந்தால் எப்படி தேர்வு நன்றாக எழுதுவார்கள்? எப்படி காலேஜில் இடம் கிடைக்கும்? எப்படி நல்ல வேலை கிடைக்கும் என கவலைகளில் மூழ்கும் பெற்றோரே ஏராளம். என்ன தான் சொன்னாலும் படிப்பதில்லை, அடித்தாலும் படிப்பதில்லை, திட்டினாலும் படிப்பதில்லை.. ஏன் குழந்தைகள் இப்படி இருக்கிறார்கள்? குழந்தைகளின் இந்த செயலுக்கான காரணம், அதை எப்படி சரிசெய்வது என இங்கு காணலாம்.

27
Study Tips For Kids

மனிதனுடைய மூளை எந்த ஒரு செயலை நீண்ட நேரம் செய்யும் போது சலிப்படையும். அந்த செயல் மகிழ்ச்சியை கொடுக்கும் வரை தான் அதில் ஆர்வம் ஈடுபாடு இருக்கும். உதாரணமாக முதல் நாள் பூரி சாப்பிடும்போது இருக்கும் ஆர்வம் ஒரு மாதம் முழுக்க பூரி உண்ணும்போது இருப்பதில்லை. வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் ஓய்வெடுக்கவே மனம் விரும்பும். மீண்டும் அலுவலக வேலையை வீட்டில் தொடர யாரும் விரும்புவதில்லை. அதைப் போலவே குழந்தைகளும் பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் உணர்வார்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக படிப்பது அவர்களை தேர்வு நேர பளுவிலிருந்து விடுவிக்கும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய தேவை பெற்றோருக்கு உள்ளது. இதற்காக அவர்கள் சில விஷயங்களை செய்ய வேண்டும்.

37
பரிசுகள்!

உங்களுடைய குழந்தைகள் படிக்க உட்காரும்போது அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஏதேனும் பரிசுகளை கொடுப்பதை வழக்கமாக வைத்திருங்கள். இந்த பரிசுகள் விலை உயர்ந்ததாகவும் மிகப்பெரிய பொருளாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய குழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு பண்டமாகவோ அல்லது அவர்களுக்கு விருப்பமான ஏதேனும் சிறிய பொருளாகவோ கூட இருக்கலாம். உதாரணமாக சாக்லேட், கலர் பென்சில், புதிய வகை பேனா, போன்ற ஏதாவது ஒன்றை பரிசாக கொடுக்கலாம். அவர்கள் ஒழுக்கமாக தினமும் படித்தால் அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு கூட்டிச் செல்வதாக வாக்களியுங்கள். தினசரி அவர்கள் படிக்க ஆரம்பித்த பின்னர் ஒரு நாள் அவர்கள் ஆசைப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

47
படிக்கும் முறை

குழந்தைகளுக்கு படிப்பை கடினமாக சொல்லித் தரக்கூடாது. அவர்கள் படிக்க வேண்டிய விஷயங்களை ஆர்வமாக கேட்கும் வகையில் கதைப் போல சொல்லிக் கொடுக்கலாம். அவர்களிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்ளாமல் அன்பாக கற்பிக்க முயற்சி செய்யுங்கள். புத்தகங்களை மட்டும் காட்டி பாடங்களை சொல்லித் தராமல் அவ்வப்போது மொபைல் அல்லது லேப்டாப் பயன்படுத்தி பாடம் தொடர்பான வீடியோக்கள் மூலமும் கற்பிக்கலாம். இதனால் அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் ஏற்படும். ரைம்ஸ், அறிவியல் பாடங்கள், கணக்கு போன்றவற்றை கற்பிக்கும் போது அவர்களுக்கு வாழ்வியல் நிகழ்ச்சிகளில் இருந்து உதாரணத்துடன் சொல்லிக் கொடுக்கலாம். அறிவியலிலுள்ள சிறு சிறு செய்முறைகளை வீட்டில் செய்து காட்டுவதால் குழந்தைகள் ஆர்வமாக அறிவியல் படிப்பார்கள். வரலாற்று விஷயங்களை சொல்லிக் கொடுக்கும் போது உண்மை சம்பவங்களை சொல்வது அவர்களுக்கு வரலாற்றின் மீது ஆர்வத்தை தூண்டும்.

57
ஊக்கம்

நீங்கள் கண்டிப்பான ஆசிரியராக இருக்கத் தேவையில்லை. குழந்தை நீங்கள் கேள்வி கேட்கும்போது ஒருவேளை தவறான பதிலை சொன்னால் அவர்களை திருத்தம் முயற்சி செய்ய வேண்டும். அதற்கு தண்டனை வழங்கக் கூடாது. ஒவ்வொரு முறை சரியான விடைகளை அவர்கள் சொல்லும்போதும் உற்சாகப்படுத்துங்கள். ஏதேனும் சிறு பரிசுகளை பாராட்டுகளுடன் வழங்கலாம். உதாரணமாக, அவர்கள் சரியாக படிக்கும் நாட்களில் சரியாக பதில் சொல்லும் போது அவர்களுக்கு ஸ்டிக்கர் ஸ்டார்களை வழங்கலாம். வீட்டு சுவற்றில் இந்த ஸ்டார்களை ஒவ்வொன்றாக ஒட்டும் போது அதன் எண்ணிக்கை அதிகரிப்பது குழந்தைகளை மேலும் ஊக்கப்படுத்தும்.

67
தனி நேரம்

குழந்தைகள் பள்ளியிலும் வீட்டிலும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என பெற்றோர் நினைக்கக் கூடாது. அவர்களுக்கென தனி நேரத்தை ஒதுக்க அனுமதிக்க வேண்டும். படிப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது போலவே அவர்கள் டிவி பார்ப்பதற்கும், வெளியில் விளையாடுவதற்கும் என சிறிது நேரத்தை கொடுப்பது அவசியம். இதனால் அவர்கள் சோர்ந்து போகாமல் உற்சாகமாக படிப்பார்கள் படிப்பில் மட்டுமே குழந்தைகளை கவனம் செலுத்த கட்டாயப்படுத்தினால் விரைவில் விரக்தி அடைய வாய்ப்புள்ளது.

77
கேள்விகள்- பதில்கள்

படிக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்பதற்கான இடம் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும். குழந்தைகள் கேள்வி கேட்கும் போது அவர்களுடைய சந்தேகத்தை தீர்த்து பதில் அளிக்க வேண்டும். அவர்களுடைய சந்தேகங்களை தெளிவுபடுத்த கற்றுக் கொடுக்க வேண்டும்.

இந்த விஷயங்களை பின்பற்றும்போது நிச்சயமாக குழந்தைகள் ஆர்வமாக படிக்க தொடங்குவார்கள் ஆரம்ப காலத்தில் இது கடினமாக தெரிந்தாலும் நாளடைவில் குழந்தைகள் இதற்கு பழகிவிடுவார்கள். பெற்றோர் குழந்தைகளுக்கு ஆசை காட்டி விட்டு பரிசுகள் வழங்காமல் இருப்பது, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது சரியான விஷயம் அல்ல. இதனால் பெற்றோர் மீது குழந்தைகளுக்கு அவநம்பிக்கை ஏற்படும். நீங்கள் குழந்தைகளுக்கு எந்த வாக்குறுதிகளை அளிக்கிறீர்களோ? அதை நிறைவேற்ற வேண்டும். உங்களால் எதை நிறைவேற்ற முடியுமோ அந்த வாக்குறுதிகளை மட்டுமே கொடுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories