
உணவு பழக்கங்களில் கவனமாக இருப்பது எடை மேலாண்மையில் உதவும். மற்ற நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கும். நடைபயிற்சியை தொடர்ந்து செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் கூடுதல் பயன்களுக்கு நாம் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இங்கு 5 விஷயங்களை பற்றி நாம் காண்போம்.
வலிமை பயிற்சி:
நடைப்பயிற்சியுடன் அவ்வப்போது வலிமை பயிற்சிகளையும் (strength training) செய்ய வேண்டும். இதனால் உங்களுடைய தசைகள் வலிமை அடைவதோடு உடலில் சகிப்புத்தன்மையும் அதிகரிக்கும். இந்த பயிற்சிகளை குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் செய்தாலும் போதுமானது.
-குறைந்த எடையுள்ள டம்பல்ஸ் அல்லது மணிக்கட்டு எடைகளை வைத்து பயிற்சி செய்யலாம்.
- வாக்கிங் செல்லும்போது குந்துகைகள் (squats) அல்லது லஞ்சஸ் (lunches) பயிற்சிகளை செய்யலாம்.
- ரெசிஸ்டன்ஸ் பேண்ட்ஸ் வைத்து பயிற்சி செய்யலாம்.
ஹிட் வொர்க்அவுட்:
ஹிட் வொர்க்அவுட் என சொல்லப்படும் அதிக தீவிர பயிற்சிகளை (HIIT) வாரத்தில் ஏதேனும் இருநாட்கள் செய்யலாம். இந்த பயிற்சிகள் உங்களுடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிகமான கலோரிகளை எரிக்கச் செய்து எடையை குறைக்க உதவும்.
- சுறுசுறுப்பாக நடக்கும்போது நடுவில் சில நிமிடங்கள் ஜாகிங் அல்லது ரன்னிங் செய்யலாம்.
- நடைபயிற்சியின் தீவிரத்தை கூட்ட படிக்கட்டுகள் ஏறலாம். ஏற்ற இறக்கமான பகுதியில் நடக்கலாம்.
இதையும் படிங்க: வெறும் '5' நிமிஷம் வாக்கிங்க்கு இவ்ளோ பவரா? என்னென்ன நன்மைகள்??
தியானம் பண்ணுங்க!
உங்களுடைய மன அழுத்தத்தைக் குறைக்கவும், மன தெளிவை அதிகரிக்கவும் நடைபயிற்சியுடன் தியானம் செய்வதை பழக்கப்படுத்துங்கள்.
- தியானம் செய்யும்போது சுவாசத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்களை சுற்றியிருக்கும் விஷயங்களை கவனியுங்கள்.
- நன்றியுணர்வுடன் இருங்கள். தியானத்தில் நேர்மறையான உறுதிமொழிகளை சொல்லி பழகுங்கள்.
இதையும் படிங்க: வாக்கிங் முதுகு வலிக்கு நிவாரணம்! எத்தனை நிமிஷம் நடக்கனும் தெரியுமா?
புதிய முயற்சிகள்:
நடைபயிற்சியில் சலிப்பு தட்டாமல் இருக்க உங்களுடைய சூழல்களை மாற்றுங்கள். நடைபயிற்சியை சுவாரஸ்யமாக வைக்கவும், சலிப்பு வராமல் இருக்கவும் புதிய முயற்சிகளை செய்ய வேண்டும்.
- ஒரே தூரத்தை கடக்காமல் புதிய இலக்குகளை வைத்துகொள்ளுங்கள்.
- கூடுதல் பயிற்சிக்காக மலைப்பாதைகள் அல்லது புதிய இடங்களில் வாக்கிங் செல்லலாம்.
- வெவ்வேறு நேரத்தில் நடக்க செல்லாம். எப்போது
காலையில் நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காலை, மாலை, மதியம் என மூன்று நேரங்களில் பிரித்து நடக்கலாம் அல்லது ஒவ்வொரு நாளும் ஒரு நேரத்தில் நடக்கலாம்.
வார்ம் அப் - கூல் டவுன்
நீங்கள் நடக்க தொடங்கும்போது உங்களுடைய தசைகளை நெகிழ்வுதன்மையுடன் வைத்திருக்கவும், நடந்து முடிந்ததும் தசைகளில் வலி ஏற்படாமல் தடுக்கவும் வார்ம் அப் மற்றும் கூல் டவுன் பயிற்சிகளை செய்வது அவசியம். நடக்கும் முன்பு 5 நிமிடம் வார்ம் அப், நடந்து முடித்தபின் ஐந்து நிமிடங்கள் கூல் டவுன் பயிற்சிகளை செய்தால் உடலை நெகிழ்வு தன்மையுடன் வைத்திருப்பதோடு, தசை பிடிப்பு, சுளுக்கு போன்ற காயங்கள் ஏற்படாமல் தடுக்கவும் உதவும். நடைபயிற்சியின் பலன்களை முழுதாக பெற்றுக் கொள்ளவும் உதவும்.
- நடைபயிற்சிக்கு முன்னும் பின்னும் தசைகளை நன்கு மசாஜ் செய்யவேண்டும். இதற்கான உபகரணமான உருளைகளை உபயோகிக்கலாம். இந்த உருளைகள் இல்லாவிட்டால் வாட்டர் பாட்டில் வைத்தும் செய்யலாம். யூடியூபில் இதற்கு வழிகாட்டல் வீடியோக்கள் உள்ளன.
- நடைபயிற்சியுடன் யோகா அல்லது பைலேட்ஸ் பயிற்சிகளை செய்யலாம்.
இங்கே கூறப்பட்டுள்ள ஐந்து விஷயங்களை நீங்கள் பின்பற்றினால் நடைபயிற்சியுடன் கூடுதலான நன்மைகளை பெற முடியும்.