
கற்றாழை ஜெல் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று நாம் அனைவரும் அறிந்ததே. இதில் வைட்டமின் ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. எனவே இது சருமம் தொடர்பான பல பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதை முகத்தில் தடவினால் முகத்தில் பருக்கள், தழும்புகள், நிறம்பிகள், சுருக்கங்கள் மற்றும் கருவளையம் போன்ற பிரச்சனைகள் வரவே வராது. ஏனெனில் கற்றாழை இருக்கும் ஆன்டி பாக்டீரியா பண்புகள் உள்ளன. அவை சருமத்தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
தவிர கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவினால் முகம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும். உங்களுக்கு தெரியுமா? பல தோல் பராமரிப்பு பொருட்களுக்கு கற்றாழை ஜெல் தான் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதனால்தான் பலர் கற்றாழை ஜெல்லை மேக்கப் ரிமூவராக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கற்றாழை ஜெல்லை நேரடியாக முகத்தில் தடவினால் சிலருக்கு சில பிரச்சனையை ஏற்படுத்தும். அது என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வாமை:
சிலருக்கு கற்றாழை ஒவ்வாமையை ஏற்படுத்தும். அத்தகையவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் நேரடியாக பயன்படுத்தக் கூடாது. மீறினால் சிவப்பு தடிப்புகள், வீக்கம், கொப்பளங்கள், அரிப்பு, சொறி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒருவேளை நீங்கள் முகத்தில் கற்றாழை ஜெல்லை தடவி, இது போன்ற அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால் உடனே அதை பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள். ஏனெனில் ஒவ்வாமையால் சில சமயம் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.
இதையும் படிங்க: Aloe Vera Juice : கற்றாழை ஜூஸில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியத்தின் ரகசியம்.. தினமும் குடிச்சா எத்தனை நன்மைகளா..?
எரிச்சல்:
கற்றாழை ஜெல் சிலருக்கு சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் கற்றாழை ஜெல்லை பயன்படுத்திய பிறகு சருமத்தில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டால் உடனே அதை பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள். இல்லையெனில், சருமத்தில் எரிச்சல், அரிப்பு, சிவத்தல் போன்றவற்றை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: பட்டு போன்ற கூந்தலுக்கு கைகொடுக்கும் கற்றாழை ஜெல்; 6 எளிய வழிகள்
வறட்சி:
இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. கற்றாழை ஜெல் குளிர்ச்சியான விளைவைக் கொண்டிருக்கிறது. ஆனால், அது எப்படி முகத்தை வறட்சியாக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம். அதாவது நீங்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி அதை நீண்ட நேரம் அப்படியே வைத்தால் அது உங்கள் முகத்தில் இருக்கும் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றிவிடும். இது உங்களது சருமத்தை இறுக்கமாக மாற்றும். இதனால்தான் கற்றாழை ஜெல்லை நீண்ட நேரம் முகத்தில் வைப்பது நல்லது அல்ல என்று சொல்லுகின்றனர். அதுவும் குறிப்பாக, உங்களுக்கு உணர்திறன் அல்லது வறண்ட சருமம் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.