Published : Oct 03, 2022, 12:02 PM ISTUpdated : Oct 03, 2022, 12:32 PM IST
Ponniyin Selvan Actress Sobhita Dhulipala Beauty Secrets: பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த மாடலும், நடிகையுமான சோபிதா துளிபாலா தன்னுடைய அழகின் ரகசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்திய நடிகை மற்றும் மாடலுமான சோபிதா துளிபாலா, கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர். இவர் முதன் முதலில் தனது கெரியரை இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் துவங்கினார். மேலும் இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2013 போட்டியில் ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் -2013 பட்டத்தை வென்றார்.
25
Image: Sobhita Dhulipala/Instagram
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சோபிதா அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அழகில் தேவதை போன்று ஜொலிக்கும் அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய பியூட்டி சீக்ரெட் பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேட் இன் ஹெவன் என்ற வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளார்.
45
Image: Sobhita Dhulipala/Instagram
இது தொடர்பாக அவர் பகிர்ந்து கொண்ட பிட்னஸ் ரகசியம் பற்றிய தகவல் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.
1. இரவு உரங்கள் செல்லும் போது, எவ்வளவு நேரம் ஆனாலும், எவ்வளவு களைப்பாக இருந்தாலும், மேக்கப் எல்லாம் களைத்து விட்டு, முகத்தை கழுவி விட்டு மட்டுமே உறங்குவாராம்.
2. முகத்திற்கு எந்த விதமான கெமிக்கல் கலந்த விலையுர்ந்த பொருட்களும் இல்லையாம். வெறும் கடலை மாவு மற்றும் பழங்கள் கலந்த பேஷியல் பயன்படுத்துவாராம்.
3. தனக்கு மிகவும் ட்ரை ஸ்கின் என்பதால் சூரிய ஒளியில் இருந்து தற்காத்து கொள்ள ஸ்கினிற்கு மாஸ்டரைசிங்க் பயன்படுத்துவாராம்.