How Desert People Clean Utensils Without Water: நம்ம வீட்ல பாத்திரம் கழுவ சோப்பும், தண்ணியும் இல்லாம ஒரு வேலையும் நடக்காது. ஆனா, ஒரு சொட்டுத் தண்ணி கூட இல்லாம, பாலைவன மக்கள் எப்படி பாத்திரங்களை பளபளன்னு மாத்துறாங்க தெரியுமா?
நம்ம வீடுகள்ல ஒருநாள் பாத்திரம் கழுவலன்னா, சிங்க் முழுக்க பாத்திரம் குவிஞ்சிடும். ஆனா, சொட்டுத் தண்ணி கூட கிடைக்காத பாலைவனத்துல மக்கள் எப்படி சமாளிக்கிறாங்க? அவங்க பாத்திரம் கழுவ சோப்போ, தண்ணியோ பயன்படுத்துறதே இல்லை. அவங்க தண்ணியே பயன்படுத்தமா எப்படி பாத்திரம் கழுவுறாங்கன்னு உங்களுக்கு தெரியுமா? அது பத்தி பார்க்கலாம் வாங்க.
பாலைவன மக்கள், பாத்திரங்களைக் கழுவ சூடான மணலையும், சாம்பலையும் பயன்படுத்துறாங்க. இது பல தலைமுறைகளாகப் பின்பற்றும் ஒரு பாரம்பரிய முறை. குடிப்பதற்கும், சமைப்பதற்கும் மட்டுமே தண்ணீரை ரொம்ப சிக்கனமா பயன்படுத்துவாங்க.
பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் உணவுத் துகள்களை நீக்க, சூடான மணலைக் கொண்டு நன்றாகத் தேய்ப்பார்கள். மணலின் சொரசொரப்பான தன்மை (Abrasive nature), எவ்வளவு கடினமான கறைகளையும் எளிதில் நீக்கிவிடும்.
சமையலுக்குப் பயன்படுத்திய விறகுக் கட்டைகளின் சாம்பலை (Wood Ash) மணலுடன் கலப்பாங்க. சாம்பலில் உள்ள காரத்தன்மை (alkaline), கிருமிகளை அழிக்கும் ஒரு இயற்கையான சானிடைசராக செயல்படுகிறது. முதலில் பாத்திரங்களை காய்ந்த புல் அல்லது துணியால் துடைத்துவிட்டு, பிறகு மணல்-சாம்பல் கலவையால் தேய்த்து, கடைசியில் சுத்தமான துணியால் துடைத்துவிடுவார்கள். பாத்திரங்கள் பளபளப்பாகிவிடும்.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சில கிராம மக்கள், தங்கள் முன்னோர்கள் காலத்திலிருந்தே இந்த முறையைப் பின்பற்றி வருகின்றனர். இதனால் தண்ணீர் சேமிக்கப்படுவது மட்டுமல்லாமல், ரசாயனப் பயன்பாடு இல்லாததால் சுற்றுச்சூழலுக்கும் இது மிகவும் நல்லது. சமீபத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.