Homemade Eggless Mayonnaise Recipe in 5 Minutes:சாலட், சாண்ட்விச்-க்கு ஏற்ற க்ரீமியான எக்லெஸ் மயோனைஸை வெறும் 6 பொருட்களை வைத்து வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். இதோ ரெசிபி.
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இந்த எக்லெஸ் மயோனைஸ் ஒரு சூப்பர் சாய்ஸ். இதை செய்வது ரொம்ப சுலபம், குறைவான பொருட்களே போதும். இதன் சுவையும் முட்டை மயோனைஸ் போலவே அருமையாக இருக்கும். வீட்டிலேயே எக்லெஸ் மயோனைஸ் செய்வதற்கான எளிய வழிமுறைகள் இதோ.
24
தேவையான பொருட்கள்
எக்லெஸ் மயோனைஸ் செய்ய, இந்த பொருட்களை தயாராக எடுத்துக்கொள்ளுங்கள்:
எண்ணெய் (சமையல் அல்லது சூரியகாந்தி எண்ணெய்) - 1 கப்
குளிர்ச்சியான பால் - 1/4 கப்
வினிகர் அல்லது எலுமிச்சை சாறு - 1 ½ டீஸ்பூன்
கடுகுப் பொடி - ½ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்
34
ஈசியான செய்முறை இதுதான்
1. பொருட்களை பிளெண்ட் செய்யவும்: ஒரு குறுகலான பாத்திரத்தில் எல்லா பொருட்களையும் சேர்த்து, பிளெண்டர் அல்லது இம்மர்ஷன் மிக்சர் கொண்டு கலவை கெட்டியாகும் வரை பிளெண்ட் செய்யவும்.
2. க்ரீமியான பதம்: கலவை நன்கு கலந்து, க்ரீமியாக மாறும் வரை தொடர்ந்து பிளெண்ட் செய்யவும். தேவைப்பட்டால், இன்னும் கொஞ்சம் எண்ணெய் அல்லது பால் சேர்க்கலாம்.
3. சேமிப்பது எப்படி: சரியான பதம் வந்ததும், மயோனைஸை ஒரு சுத்தமான கண்ணாடி பாத்திரத்தில் மாற்றி, ஃபிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
செய்து முடித்த மயோனைஸின் சுவையை மேலும் அதிகரிக்க, உங்களுக்குப் பிடித்த சில பொருட்களை சேர்க்கலாம். மொறுமொறுப்பான சுவை மற்றும் நல்ல டெக்ஸ்சருக்கு பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட் போன்ற காய்கறிகளை கலந்து கொள்ளலாம். மயோனைஸுக்கு நல்ல மணமும் தனித்துவமான சுவையும் கிடைக்க, நறுக்கிய பூண்டு, கொத்தமல்லி அல்லது புதினா போன்ற மூலிகைகளை சேர்க்கலாம். சற்று டாங்கியான சுவையை விரும்புபவர்கள் தக்காளி கெட்ச்அப், சில்லி சாஸ் அல்லது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கலாம். மேலும், மிளகுத்தூள், சில்லி ஃப்ளேக்ஸ், ஓரிகானோ போன்ற மசாலாக்களையும் தேவைக்கேற்ப கலந்து கொள்ளலாம். இவ்வாறு மாற்றம் செய்து, சாண்ட்விச், பர்கர், ஃப்ரைஸ் மற்றும் ஸ்நாக்ஸ்களுடன் பரிமாறினால் சுவை இன்னும் சிறப்பாக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.