Garlic Smell on Hands : பூண்டு உரித்த பிசுபிசுப்பு, வாடையை நீக்கும் சூப்பர் டிப்ஸ்! யாருக்குமே தெரியாத சீக்ரெட்

Published : Dec 26, 2025, 06:18 PM IST

பூண்டு உரித்த பிறகு கையில் கடுமையான வாடை அடிகும் மற்றும் பிசுபிசுப்பாகவும் இருக்கும். இந்த பிரச்சினையை போக்க கீழே சொல்லப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றினால் போதும்.

PREV
15
Garlic Smell on Hands

பூண்டு தோல் உரித்ததும் கையில் ஒருவித வாடை அடிக்கும். கையும் பிசுபிசுப்பாகவும் இருக்கும். என்னதான் கையை சோப்பு போட்டு கழுவினாலும் கையில் பூண்டு வாடை அடிக்க தான் செய்யும். ஆனால் கீழே சொல்லப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றினால், கையில் பூண்டு வாடையே வீசாது. வாங்க அது என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

25
எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறானது கறைகள் மற்றும் பாத்திரங்களில் வீசும் நாற்றத்தை நீக்குவதற்கு மட்டுமல்ல, கையில் அடிக்கும் பூண்டின் வாசனை நீக்கவும் உதவி செய்யும். இதற்கு ஒரு ஸ்பூன் உப்பில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதை கையில் நன்கு தேய்த்து கழிவினால் போதும் கையில் பூண்டின் வாசனையே இருக்காது.

35
காபி பொடி :

கையில் அடிக்கும் பூண்டின் வாசனையை நீக்க காபி பொடி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதற்கு ஒரு ஸ்பூன் காபி பொடியில் சிறிதளவு தண்ணீர் கலந்து அந்த பேஸ்ட்டை இரண்டு கைகளிலும் நன்கு தடவிக்கொள்ளுங்கள். பிறகு கையை தேய்த்து கழுவினால் பூண்டின் வாசனை கையில் அடிக்கவே அடிக்காது. கையில் நல்ல மணமும் வீசும்.

45
டூத் பேஸ்ட்:

பூண்டு உரிக்கும் போது கையில் ஏற்படும் பிசுபிசுப்பு தன்மை மற்றும் கடுமையான வாசனையை நீக்க டூத் பேஸ்ட் உதவும். இதற்கு முதலில் கையை தண்ணீரில் கழுவும் பிறகு டூத் பேஸ்டில் சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது தண்ணீர் கலந்து நன்கு குழைத்து அந்த பேஸ்ட்டை உங்களது ரெண்டு கைகளிலும் தடவி நன்கு தேய்த்து கழுவவும். இப்படி செய்தால் கையில் பூண்டின் வாசனை சுத்தமாக இருக்காது.

55
முக்கிய குறிப்பு :

பூண்டு தோலை உரிக்கும் முன் முதலில் உங்களது ரெண்டு கைகளிலும் கொஞ்சமாக தேங்காய் எண்ணெயை தடவிக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் பூண்டு உரிக்கும் போது கை பிசுபிசுப்பாக இருக்காது. பூண்டு வாசனையும் கையில் வீசாது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories