ஆல்கஹால் : ஆல்கஹால் எண்ணெய்யை விட மிளகாயில் இருக்கும் கேப்சைசின் மிக எளிதாக கரைத்துவிடும். எனவே உங்களிடம் ஆல்கஹால் இருந்தால் கைகளில் ஆல்கஹாலை தேய்க்கலாம் அல்லது கழுவலாம். இதனால் எரிச்சல் குறையும்.
பேக்கிங் சோடா : மிளகாயால் ஏற்பட்ட எரிச்சலைப் போக்க பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். இதற்கு பேக்கிங் சோடாவில் சிறிதளவு தண்ணீர் கலந்து பாட் பேஸ்ட் தயாரித்து, அதை உங்களது கைகளில் தடவி காய்ந்த பிறகு, சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
வினிகர் ; வினிகரில் இருக்கும் அமிலத்தன்மை கேப்சைச்சின் தீவிரத்தை குறைக்க உதவும். எனவே, இதை கைகளில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு, பிறகு சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும்.