ஏர் கூலரை 'ஏசி' போல மாற்றும் ஈஸியான ட்ரிக் பத்தி தெரியுமா?
ஏசியைப் போலவே ஏர் கூலரில் இருந்தும் காற்று ஜில்லுனு வர சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அது என்ன என்பதை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
ஏசியைப் போலவே ஏர் கூலரில் இருந்தும் காற்று ஜில்லுனு வர சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அது என்ன என்பதை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
How to Make a Cooler Work Like an Air Conditioner : கோடை காலம் தொடங்கியாச்சு. வெளியே வெயில் சுட்டெரிக்கிறது. அடிக்கிற வெயிலில் வீட்டில் இருக்கும் ஃபேனுக்கு அடியில் கூட இருந்தால் வியர்க்க தான் செய்கிறது. எனவே ஏசி இல்லாமல் இந்த சீசனை கடப்பது சாத்தியமில்லை. மார்ச் மாதமே இப்படி இருக்கிறது என்றால் ஏப்ரல், மே மாதங்களில் அடிக்கும் வெயிலை தாங்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அடிக்கும் வெயிலே சமாளிக்க ஏசி வாங்குவது எல்லோருக்கும் சாத்தியமில்லை. இத்தகைய சூழ்நிலையில், உங்கள் வீட்டில் இருக்கும் கூலரில் ஏசியைப் போலவே சில்லுனு காற்று வர செய்யலாம் தெரியுமா?
உண்மையில் ஏசி வாங்க முடியாதவர்கள், ஏர் கூலரை வாங்குகிறார்கள். ஆனால் கூலரில் ஏசி தரும் உணர்வை நாம் பெறுவதில்லை. இதற்கு நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம். அது என்ன தவறுகள், அதை எப்படி தவிர்க்க வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.
ஏர் கூலரை சரியான இடத்தில் வைக்கவில்லை என்றால், காற்று அவ்வளவாக வராது. எனவே நீங்கள் யார் கூலரை கதவு மற்றும் ஜன்னலுக்கு பக்கத்தில் அல்லது காற்றோட்டமான இடத்தில் வைத்தால் மட்டுமே ஏர்கூலரிலிருந்து காற்று நன்றாக வரும்.
சுத்தமாக வைத்துக்கொள்:
உங்கள் வீட்டில் இருக்கும் ஏர் கூலரில் இருந்து சரியாக குளிர்ந்த காற்று வரவில்லை என்றால், அதன் பேட்களை உடனே சரி செய்து பாருங்கள். ஏனெனில் பேட்கள் அழுக்காக அல்லது உலர்ந்ததாக இருந்தால் சூடான காற்று தான் வெளியேவரும்.
இதையும் படிங்க: கோடையில் வீட்டை ஜில்லுனு ஆக்க வந்துவிட்டது.. சுவரில் மாட்டப்படும் ஏர் கூலர்..விலை ரொம்ப கம்மிதான்..
ஏர் கூலரில் தண்ணீர் குறைவாக இருந்தாலோ அல்லது தண்ணீர் பம்ப் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ குளிர்ந்த காற்று கிடைக்காது. மேலும் ஏர் கூலரின் விசிறி மற்றும் மோட்டார் சுத்தமாக இருக்காவிட்டால் நல்ல காற்றை வழங்காது.
சூரிய ஒளி:
ஏர் கூலரில் இருக்கும் உலோகம் நேரடி சூரிய ஒளியில் பட்டால், அது வெப்பமடைந்து உள்ளே இருக்கும் தண்ணீரை சூடாக்கும். இதனால் அதிலிருந்து வெளியேறும் காற்றும் சூடாக இருக்கும்.
இதையும் படிங்க: வெறும் ஆயிரம் ரூபாய்க்கு சூப்பர் கூலர்! எந்த வெயிலிலும் குளிர்ந்த காற்று!
- ஏர் கூலர் எப்போதும் திறந்திருக்கும் ஜன்னல் முன் தான் வைக்க வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும்.
- ஏர் கூலரை ஆன் செய்வதற்கு முன் டேபிள் ஃபேன் அல்லது பயன்படுத்தவும். முக்கியமாக வீட்டின் அறை வெப்பமாக இருந்தால் கண்டிப்பாக ஃபேன் சிறிது நேரம் ஆன் செய்த விட்டு பிறகுதான் ஏர்கூலரை ஆன் செய்ய வேண்டும்.
- ஏர் கூலிலிருந்து வரும் காற்று ஜில்லென்று இருக்க ஏர் கூலரில் இருக்கும் தண்ணீரில் ஐஸ் கட்டிகளை போட்டால் ஏசியில் இருந்து வரும் காற்று போலவே இருந்த காட்சி வெளியேறும்.