வெள்ளை ட்ரெஸ்ல பெயிண்ட் கறையா? இந்த '2' பொருள் வைச்சு போக்கிடலாம்

Published : Mar 25, 2025, 10:48 AM ISTUpdated : Mar 25, 2025, 11:33 AM IST

வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து வெள்ளை துணியில் இருக்கும் பெயிண்ட் கறையை சுலபமாக அகற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

PREV
14
வெள்ளை ட்ரெஸ்ல பெயிண்ட் கறையா? இந்த '2' பொருள் வைச்சு போக்கிடலாம்

How to Remove Paint Stains from White Clothes : உங்களது வெள்ளை துணியில் பெயிண்ட் கறைப்பட்டு அதை அகற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? கவலை வேண்டாம். உங்களது ஆடைக்கு எந்தவித சேதாரமும் இல்லாமல் அதில் படிந்திருக்கும் பிடிவாதமான பெயிண்ட் கரையை சுலபமாக அகற்றி விடலாம் தெரியுமா? ஆம், இதற்கு வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மட்டும் போதும். அதை பயன்படுத்தி வெள்ளை துணியில் படிந்து இருக்கும் பிடிவாதமான பெயிண்ட் கறையை சில நிமிடங்களிலேயே அகற்றி விடலாம். அது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

24
பேக்கிங் சோடா மற்றும் வினிகர்:

வெள்ளைத் துணியில் படிந்திருக்கும் பிடிவாதமான பெயிண்ட் கறையை அகற்றுவதற்கு பேக்கிங் சோடா மற்றும் வினிகர் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை இரண்டும் எந்தவிதமான பிடிவாதமான கரையையும் சுலபமாக அகற்றுவதற்கு உதவுகிறது. இதற்கு முதலில் வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை சம அளவு எடுத்து நன்றாக கலந்து பேஸ்ட் போல் உருவாக்கிக் கொள்ளுங்கள். பிறகு அதை கரை படிந்த துணியில் தடவி வழக்கம் போல துணிகளை துவர்ப்பதற்கு முன் செல்ல மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு துவைக்க வேண்டும். வினிகர் மற்றும் இருக்கும் அமிலத்தன்மை ஆடைகளில் படிந்து இருக்கும் பெயிண்ட் கறையை உடைக்க உதவுகிறது. 

இதையும் படிங்க:  பட்டுப்புடவையில் விடாப்பிடியான கறையா? வீட்டில் வைத்தே '1' ரூபாய் செலவில்லாமல் நீக்க சூப்பர் டிப்ஸ்!!

34
உப்பு மற்றும் எலுமிச்சை சாறு:

ஆடைகளில் படிந்திருக்கும் பெயிண்ட் கறை போக்க எலுமிச்சை சாறு மற்றும் உப்பு உதவுகிறது. எலுமிச்சை சாறில் இருக்கும் அமிலத்தன்மை பெயிண்ட் கரையை கரைக்க உதவும். அதுபோல உப்பு பெயிண்ட் கரையை அகற்ற செயல்படுகிறது. எனவே இவை இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து பேஸ்ட் போலாக்கி அதை துணியில் படிந்திருக்கும் பெயிண்ட் கறை மீது தடவி, பிறகு வழக்கம் போல ஆடைகளை துவைப்பதற்கு முன் சில மணி நேரம் அதை அப்படியே ஊற வைத்து பிறகு துவைக்க வேண்டும்.

இதையும் படிங்க:  இந்த '4' பொருள் போதும் துணியில் படிந்த சேற்றுக் கறையை சுலபமாக நீக்கிவிடலாம்!

44
ஆல்கஹால்

ரப்பிங் ஆல்கஹால் பிடிவாதமான கறையை நீக்க உதவுகிறது. வெள்ளை ஆடைகளில் படிந்து இருக்கும் பிடிவாதமான பெயிண்ட் கறையை அகற்ற இது உதவுகிறது. இதற்கு முதலில் ஒரு காட்டன் பஞ்சை ஆல்கஹாலின் ஊற வைத்து பிறகு கரை படிந்த துணியில் தடவ வேண்டும். வழக்கம்போல ஆடைகளை துவைப்பதற்கு முன் சில நிமிடங்கள் அதை அப்படியே வைத்து விட்டு பிறகு றைக்க வேண்டும். ஆல்கஹால் கறையை சுலபமாக அகற்ற உதவுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories