தர்பூசணி 'இப்படி' இருந்தா கண்டிப்பா வாங்காதீங்க!! நல்ல பழம் எப்படி இருக்கும் தெரியுமா?
தர்பூசணி பழம் வாங்கும் போது எந்தெந்த விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக காணலாம்.
தர்பூசணி பழம் வாங்கும் போது எந்தெந்த விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக காணலாம்.
How To Choose The Best Watermelon : கோடைகாலம் வரத் தொடங்கும்போது தர்பூசணி பழங்களின் விற்பனையும் ஆரம்பித்துவிடும். எங்கு பார்த்தாலும் தர்பூசணி கடைகள் தான். மக்களும் கூட்டம் கூட்டமாக சென்று வாங்குவர். ஆனால் எல்லா தர்பூசணிகளும் நல்லவை என்று சொல்லிவிட முடியாது. மக்களை கவர தர்பூசணி பழங்களை அதிக சிவப்பாக்கி காட்டுவது வாடிக்கையாகிவருகிறது. அதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது. அண்மை சில கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் தர்பூசணி பழங்கள் சிவப்பு சிரப், ரசாயனங்கள் கலந்து சிவப்பாக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த சூழலில் எப்படி இதை கவனித்து வாங்குவது? நல்ல தர்பூசணி பழங்கள் எப்படி இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
நல்ல தர்பூசணி பழங்கள் கனமாகவும் சிறிது மஞ்சள் கலந்த புள்ளிகளுடன் நிறமாகவும் இருக்கும். நன்கு பழுத்த தர்பூசணியில் உள்ள பச்சைக் கோடுகள் விரல் அளவு விரிந்து காணப்படும். மெலிந்த கோடுகளில் இனிப்பு குறைவாக இருக்கும்.
தர்பூசணி பழம் கொடியுடன் இணையும் தண்டு பகுதியை வைத்து தான் சுகர் ஸ்பாட் சோதனையை செய்வார்கள். அதாவது நல்ல இனிப்புள்ள பழமா என கண்டறிவது. பழம் அதிக இனிப்பு சுவை கொண்டிருக்கும் எனில் பழமும் கொடியும் இணையும் தண்டு பகுதி சிறியதாகவும், பள்ளமாகவும் இருக்கும். இந்த இடத்தில் இவ்வாறாக இல்லாமல் ஈரப்பதமாகவோ, பெரியதாகவோ இருந்தால் அது சரியாக பழுக்காதது அல்லது அதிகமாக பழுத்துவிட்டது என அர்த்தம்.
இனிப்பான பழம் என்றால் பச்சைக்கோடுகள் விரல் அளவுக்கு மிஞ்சியதாக இருக்கும். தர்பூசணியை தட்டினால் டொக் என கனீர் சத்தம் வரும். அதில் எங்குமே துளைகள் இல்லாமல் இருக்கிறதா? என பார்த்து வாங்க வேண்டும்.
இதையும் படிங்க: இவங்க எல்லாம் மறந்தும் தர்பூசணி சாப்பிடக் கூடாது
தர்பூசணியின் வடிவத்திற்கு ஏற்ற கனம் கொண்டிருக்க வேண்டும். பார்க்க பெரியதாகவும் தூக்கி பார்த்தால் இறகு போல இலகுவாகவும் இருக்கக் கூடாது. நன்றாக பழுத்த பழம்தான் கனமாக, கெட்டியாக இருக்கும். சுமாராக நீர்ச்சத்து குறைவாக இருக்கும் பழம் எனில் தூக்கி பார்க்கும்போது இலேசாக இருக்கும்.
இதையும் படிங்க: Watermelon : தர்பூசணியை அதிகமா சாப்பிட்டால் என்னாகும்?
தர்பூசணியை சுற்றி பார்த்தால் அதன் அடிப்பகுதியில் மஞ்சள் வண்ணப் புள்ளிகள் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பழம் வயலில் பழுத்தத என பொருள். அதை வண்ணமாக்க செயற்கை வேலைகள் செய்யவில்லை. இதுவே வெள்ளை அல்லது பச்சை நிறமாக இருந்தால் நன்றாக பழுக்கவில்லை என அறிந்து கொள்ளலாம்.
- தர்பூசணியில் மேற்புறம் சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகளுக்கு இடையே ஆங்காங்கே வெள்ளை நிறம் தெரிந்தால், அது ஊசி போடப்பட்டதன் அறிகுறியாக இருக்கலாம்.
- தர்பூசணியில் எங்குமே துளைகள் இல்லையென்று உறுதிபடுத்தி வாங்குங்கள். துளைகள் இருப்பது ஊசி போட்ட அறிகுறியாக கூட இருக்கலாம்.