world Water Day 2025 : தண்ணீர் சிக்கனத்திற்கு பயனுள்ள '4' டிப்ஸ்!! பற்றாக்குறைக்கு வாய்ப்பே இல்ல!
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த எளிமையான சில குறிப்புகளை இங்கு காணலாம்.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த எளிமையான சில குறிப்புகளை இங்கு காணலாம்.
Tips To Avoid Wasting Water : தமிழ்நாட்டில் வெயில்காலம் வரும்போது கூடவே தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனையும் கூடவே வருகிறது. தண்ணீர்த் தட்டுப்பாடு பிரச்சனையால் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் படும்பாடு பெரும்பாடாக இருக்கும். தண்ணீரை அளந்து பயன்படுத்தும் சூழலே வந்துவிடும். மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றுதான் தண்ணீர். மனிதனால் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது என்றால் மிகையாகா! அப்படி இருக்க தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்தினால் பற்றாக்குறை உள்ள காலங்களில் சிக்கல் ஏற்படாமல் இருக்கும் என இங்கு காணலாம்.
சிக்கனமாக இருப்பதன் அடிப்படையே நாம் எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பதை தெரிந்து கொள்வதில் இருந்து தான் வரும். உதாரணத்திற்கு ஜிபேயில் தொடர்ந்து பணத்தை ஸ்கேன் செய்யும்போது பணத்தின் அருமை புரியாது. அதுவே கை நிறைய பணத்தை வைத்து அதை ஒவ்வொரு செலவுக்கும் கொடுத்து பாருங்கள். கையில் மீந்திருக்கும் கடைசி ரூபாய் நோட்டு நீங்கள் அதிகமாக செலவு செய்ததை முகத்தில் அடித்தாற்போல சொல்லும். பயனுள்ள செலவுகளை பற்றி பேசவில்லை.
இதையும் படிங்க: இதய நோயாளிகளே! இந்த அளவுக்கு மட்டும் தண்ணீர் குடிச்சா போதுமாம்..நிபுணர்களே சொல்லுறாங்க...
சிக்கனம் என்று வந்துவிட்டால் ஆடம்பரங்களைதான் குறைக்க வேண்டும். ஒரு கப் தண்ணீரில் முகம் கழுவலாம் எனும் போது அதற்கு மாறாக குழாயை திறந்துவிட்டு முகம் கழுவினால் தண்ணீர் விரயம் தானே!
இதையும் படிங்க: நின்றபடி தண்ணீர் குடிக்குறீங்களா? அப்ப கண்டிப்பா இந்த 'பிரச்சனை' வரலாம் தெரியுமா?
- வீட்டில் சேரும் அழுக்குப் பாத்திரங்களை கழுவும் முறையை மாற்ற வேண்டும். தண்ணீர் குழாயை திறந்துவிட்டு கழுவாமல் வாளி போன்ற பெரிய பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து வைத்து கழுவலாம்.
- காலை பல் துலக்க, முகம் கழுவ குழாயை திறந்து கண்டபடி தண்ணீரை செலவு செய்யாமல் ஒரு சிறு வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்து பயன்படுத்துங்கள்.
- வாகனங்களை சுத்தமாக வைக்க வேண்டும்தான். அதற்காக குற்றால அருவி மாதிரி தண்ணீர் குழாயில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கமால் ஈரத்துணி மூலம் சுத்தமாக துடைக்கலாம்.
- முன்பு குளிக்கும்போது ஷவரில் மணிக்கணக்காக குளித்திருக்கலாம். ஆனால் தண்ணீர் பற்றாக்குறை காலம் வந்தாலே வாளிக்கு மாறிவிடவேண்டும். ஒரு வாளியில் தண்ணீரை நிரப்பி அதிலே குளித்து முடித்தால் நல்லது.
- வீட்டில் நீர்க்கசிவு இருந்தால் அதை தாமதிக்காமல் சரி செய்ய வேண்டும். ஒவ்வொரு துளி தண்ணீரும் முக்கியம் தான்.
- தினமும் துணி துவைக்க வாஷிங் மிஷினை பயன்படுத்தினால் அதிக நீர் செலவாகிவிடும். ஒரே நாளில் துணிகளை துவைப்பதால் கணிசமாக தண்ணீர் செலவை குறைக்கலாம். மீதம் உள்ள நீரை கழிவறையில் கூட பயன்படுத்தலாம்.
- கோடைகாலங்களில் தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க இந்திய கழிவறைதான் சிறந்த தேர்வு. வெஸ்டர்ன் டாய்லட் அந்த நேரத்தில் மட்டுமாவது பயன்படுத்துவதை தவிருங்கள்.
- தண்ணீர் குழாய்களை எப்போதும் சரியாக மூடிவிடுங்கள். சொட்டு நீர் கூட சிறுதுளி பெருவெள்ளம் போல தான். அதனால் கவனமாக இருங்கள்.
- சாப்பிடும்போது கை கழுவ வாளியில் உள்ள நீரை பயன்படுத்துங்கள்.