Remove Hair From Bathroom Drain : பொதுவாக தினமும் குளிப்பதால் குளியலறையை அடிக்கடி பயன்படுத்துகிறோம். இதனால் பாத்ரூம் டிரைனில் முடி அடிக்கடி சிக்கி சுத்தம் செய்வதற்கு கடினமாகிறது. ஒருவேளை அதிகமாக முடி சிக்கி இருந்தால் தண்ணீர் போக முடியாதபடி தேங்கி நிற்கும். இதனால் ரசாயன பொருட்கள் அல்லது துப்புரவாளரின் உதவியதான் நாட வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சில நிமிடங்களிலேயே அடைப்பை சுத்தம் செய்து விடலாம். இதற்காக நீங்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது என்னென்ன? பயன்படுத்தும் முறை என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
24
பேக்கிங் சோடா மற்றும் வினிகர்:
பாத்ரூம் டிரைனை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா மற்றும் வினிகர் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதற்கு முதலில் பாத்ரூம் டிரைனில் பேக்கிங் சோடாவை போட வேண்டும். அதன் பிறகு அதன் மேலே வினிகர் ஊற்ற வேண்டும் .சிறிது நேரம் அப்படியே வைத்து விடுங்கள். முக்கியமாக தண்ணீர் ஏதும் ஊற்றக்கூடாது. சிறிது நேரம் கழித்து சூடான நீரை டிரைனில் ஊற்ற வேண்டும். பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்ந்து ஒரு ரசாயன எதிர்வினை உருவாக்குகிறது இதனால் சிக்கி இருக்க முடியும் சுலபமாக அகன்று விடும். குளிர்ந்த நீரால் ட்ரைனை மறக்காதீர்கள்.
குளியலறை ட்ரைனை சுத்தம் செய்ய முதலில் அடைபட்ட ட்ரைனில் உப்பை தூவி விடுங்கள். அதன் பிறகு கொதிக்கும் வரை அதில் ஊற்றி அப்படியே வைத்து விடுங்கள். உப்பு முடியை இலகுவாக்கிவிடும். இதனால் முடியை எளிதாக அகற்றி விடலாம்.
கோகோ கோலா போன்ற குளிர்பானத்தை வைத்து பாத்ரூமில் சிக்கி இருக்கும் முடியை அகற்றி விடலாம். இதற்கு பாத்ரூம் டிரைனில் கோகோ கோலாவை ஊற்றி சிறிது நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அதில் இருக்கும் கார்போனிக் அமிலம் முடியை உடைக்க உதவும். பிறகு நீங்கள் அதை இலகுவாக சுத்தம் செய்யலாம்.