விரல் நுனியின் தோல் உரிவதற்கு காரணம் தெரியுமா? இதை பண்ணா தடுக்கலாம்
விரல் நுனியில் தோல் புரிவதற்கான காரணங்கள் மற்றும் அதை தடுக்க சில வழிமுறைகள் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.
விரல் நுனியில் தோல் புரிவதற்கான காரணங்கள் மற்றும் அதை தடுக்க சில வழிமுறைகள் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Reasons Why Your Skin Around the Nails is Peeling : விரல் நுனியில் தோல் உரிவது நம்மால் பலரும் அனுபவிக்கும் ஒரு பிரச்சனையாகும். விரலின் அழகைக் கெடுப்பது மட்டுமல்லாமல் கடுமையான வலியையும் ஏற்படுத்தும். இதனால் சில சமயங்களில் சாப்பிடாமல் கூட போய்விடும். இதனால் பலர் இந்த பிரச்சனையை புறக்கணிக்கிறார்கள். மேலும் அது ஒரு சிறிய விஷயமாக கருதுகிறார்கள். இருப்பினும் நீங்கள் இந்த பிரச்சனையை அடிக்கடி எதிர்கொண்டால், அதற்கு பின்னால் ஒரு உறுதியான காரணம் இருக்கிறதா? என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். ஆம், விரல் நுனியில் தோல் உரிதலுக்கான காரணத்தை முதலில் அறிந்து அதிலிருந்து நிவாரணம் பெற, சில எளிய மற்றும் பயனுள்ள வழிகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
1. குளிர் காலம் மற்றும் வறண்ட வானிலை : குளிர் காலத்தில் காற்றில் ஈரப்பதம் குறையும். இதனால் தோல் வறண்டு விரிசல் ஏற்படும். இந்த மாற்றம் முதலில் கைகளில் தான் உணர்த்துகிறது. அதாவது படிப்படியாக விரல்களில் தோல் உரியத் தொடங்கும்.
2. அடிக்கடி கைகளை கழுவுவது அல்லது சானிடைசர் பயன்படுத்துவது: கொரோனாவுக்கு பிறகு மக்களிடம் சனிடைசர் பயன்படுத்துதல் மற்றும் அடிக்கடி கைகளை கழுவுதல் பழக்கம் அதிகரித்து உள்ளது. இருப்பினும் அதிகப்படியான சோப்பு அல்லது ஆல்கஹால் கலந்த சானிடைசர் சருமத்தில் இருக்கும் எண்ணெயை அகற்றி, சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும். இதனால் தோல்கள் உரிந்துவிடும்.
இதையும் படிங்க: நகங்கள் 'இப்படி' இருக்கா? அப்ப 'இந்த' நோயோட அறிகுறியா இருக்கலாம்
3. ஊட்டச்சத்து குறைபாடு: உடலுக்கு போதுமான அளவு வைட்டமின்கள் பி, ஈ, சி மற்றும் இரும்புச்சத்து கிடைக்கவில்லை என்றால் தோல் பலவீனமடைந்து விரிசல் ஏற்படும். குறிப்பாக உங்களது உணவில் பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இல்லாவிட்டால் உங்களது விரல்களின் தோல் விரைவாக உரியும்.
4. தோல் தொற்று : உங்களது விரல்களில் உள்ள தோல் அரிப்பு, சிவப்பு, வீக்கம் போன்றவை தோல் தொற்று அல்லது ஒவ்வாமை அறிகுறியாக இருக்கலாம். இதனால் விரல்களில் தோல் உரிய ஆரம்பிக்கும்.
5. மன அழுத்தம் : சிலர் அதிகமான மன அழுத்தத்தில் இருக்கும்போது தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் விரல்களில் இருக்கும் தோலை நீக்க தொடங்குவார்கள். இது ஒரு பதட்டமான பழக்கமாகும். இந்த பழக்கம் நாளடைவில் படிப்படியாக அதிகரித்து விரல்களின் தோலை சேதப்படுத்த தூண்டும்.
மாய்ஸ்சரைசர் :
வறண்ட மற்றும் உரிந்து விடும் சருமத்தை குணப்படுத்த எளி வழி அதை நன்கு நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். தேங்காய் எண்ணெய், கற்றாழை அல்லது ஏதேனும் நல்ல மாய்ஸ்சரைசரை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கைகளில் தடவுங்கள்.
சூடான நீர்:
உங்களது விரல் நுனியில் அடிக்கடி தோல் உரிந்து கொண்டே இருந்தால் உங்களது கைகளை மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் சுமார் 10 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு லேசான மாய்ஸ்சரைசர் அல்லது கிளிசரின் தடவுங்கள். இது சருமத்தை சரி செய்ய உதவும்.
இதையும் படிங்க: நம் கை விரல் நகங்களில் வெள்ளை கோடு இருந்தால் அதிர்ஷ்டம் வரும்னு சொல்றது உண்மையா?
ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள் :
பழங்கள், காய்கறிகள், நட்ஸ்கள், தயிர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உங்களது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை சருமத்தை உள்ளிருந்து நீரேற்றத்துடன் வைக்க உதவும். முக்கியமாக போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கைகளை பாதுகாக்கவும்:
பாத்திரங்களை கழுவுதல், துணிகளை துவைப்பது, வீட்டை சுத்தம் செய்தல் போன்ற விஷயங்களை செய்யும் போது கண்டிப்பாக கையுறைகளை பயன்படுத்துங்கள்.
தோல் உரிக்கும் பழக்கத்தை கைவிடு!
மன அழுத்தம் இருக்கும் போது விரல் நுனியில் இருக்கும் தோலை உரிக்கும் பழக்கம் இருந்தால் உடனே அந்த பழக்கத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள். அதற்கு பதிலாக வேறு ஏதேனும் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்.