Cleaning Tips : கஷ்டமே பட வேண்டாம்! போர்வை, கம்பளில வர்ற துர்நாற்றத்தைப் நீக்க சூப்பர் டிப்ஸ்

Published : Nov 12, 2025, 04:35 PM IST

நீண்ட நாட்கள் அலமாரியில் அடைத்து வைத்திருக்கும் போர்வை, கம்பளியில் ஒருவித வாசனை வீசும். அதை செலவே இல்லாமல் போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை ட்ரை பண்ணி பாருங்க.

PREV
15
Remove Odor From Quilts

குளிர்காலம் தொடங்கியாச்சி. அலமாரியில் இருக்கும் போர்வை, கம்பளியை வெளியே எடுக்க நேரம் வந்தாச்சு. ஆனால், நீண்ட நாட்கள் அவை அலமாரியில் அடைத்து வைத்திருப்பதால், அவற்றிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். எனவே, சிலர் அவற்றை பயன்படுத்துவதற்கு முன் ட்ரை க்ளீனிங் கொடுப்பார்கள். அதற்கு நிறைய பணம் செலவாகும். ஆனால், ஒரு பைசா செலவில்லாமல் கம்பளி, போர்வையில் வீசும் துர்நாற்றத்தை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை மட்டும் ஃபாலோ பண்ணினால் போதும். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

25
சூரிய ஒளி :

கம்பளி, போர்வையை வெயிலில் சிறிது நேரம் போட்டு உலர்த்தவும். ஏனெனில் சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் பூஞ்சைகள், பாக்டீரியாக்களை அழிப்பது மட்டுமல்ல, துர்நாற்றத்தை நீக்கி, ஃப்ரஷ்ஷாக வைத்திருக்க உதவும். குளிர்காலம் மட்டுமல்ல எல்லா பருவத்திலும் வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக போர்வையை சூரிய ஒளியில் போட்டு உலர்த்துவது நல்லது.

35
கற்பூரம் பயன்பாடு :

கம்பளி, போர்வையில் அடிக்கும் துர்நாற்றத்தை போக்க கற்பூரம் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு சுத்தமான துணியில் கற்பூரத்தை பொடியாக்கி அதை மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். பிறகு அதை போர்வைக்குள் மடித்து 1 நாள் முழுவதும் வைக்கவும். இப்படி செய்தால் போர்வையில் அடிக்கும் துர்நாற்றத்தை அது உறிஞ்சி விடும். மேலும் கற்பூரத்தின் வாசனை போர்வையில் அடிக்கும்.

45
வெள்ளை வினிகர் பயன்பாடு :

கம்பளியில் வரும் துர்நாற்றத்தை போக்குவதற்கு வெள்ளை வினிகர் சிறந்த தேர்வாக இருக்கும். இதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் பாதியளவு தண்ணீர் ஊற்றி அதில் 30 மி.லி வினிகரை சேர்த்து முழுவதும் ஸ்பிரே செய்யவும். பிறகு கம்பளியை வெயிலில் காய வைக்கவும். வெள்ளை வினிகரில் இருக்கும் அமிலத்தன்மை கம்பளியில் வீசும் துர்நாற்றத்தை முற்றிலும் அழித்துவிடும்.

55
பேக்கிங் சோடா :

இயற்கையாகவே பேக்கிங் சோடாவிற்கு துர்நாற்றத்தை போக்கும் பண்புகள் உள்ளன. இப்போது ஒரு கிண்ணத்தில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து அதை பெட்ஷீட் முழுவதும் தெளித்து வெயிலில் உணர்த்தினால் துர்நாற்றம் நீங்கிவிடும்.

Read more Photos on
click me!

Recommended Stories