கிராமமோ அல்லது நகரமோ எங்கிருந்தாலும் பலரது வீடுகளிலும் இருக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று எலித்தொல்லை ஆகும். எலிகள் நாம் உடுத்தும் ஆடைகள், உணவுப்பொருட்கள், புத்தகங்கள் என்று அனைத்தையும வீணாக்குகின்றன.
மேலும் பல்வேறு ஆரோக்கியப் பிரச்சினைகளையும் உண்டாக்குகின்றன. வீடுகளில் எலிகள் இருக்கும் பட்சத்தில் நிம்மதியாக இருக்க முடியாது. என்னதான் எலிப்பொறி, எலிமருந்து கடைகளில் இருந்து வாங்கி வீட்டில் வைத்தாலும் எலித்தொல்லையை முழுதாக விரட்டுவது என்பது சற்று கடினமான ஒன்று என்று கூறலாம்.
எப்போதும் கடைகளில் இருந்து பொருட்களை வாங்கி உபயோகிப்பதை விட வீட்டிலிருக்கும் சில பொருட்களை வைத்தே நம் வீட்டினுள் வசிக்கும் எலிகளை விரைவில் எலித்தொல்லையில் இருந்து நிவாரணம் பெறமுடியும்.மேலும் கடைகளில் இருந்து வாங்கப்படும் மருத்துங்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியவையும் கூட!
எலியை வீட்டில் இருந்து விரட்டி அடிக்க பயன்படும் வீட்டு பொருட்கள் என்னென்ன என்பதை என்று இந்த பதிவில் காணலாம் .