திருமணத்திற்கு முன் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்...!!

First Published | Apr 26, 2023, 5:43 PM IST

ஆண்கள் திருமணம் செய்வதற்கு முன் சில விஷயங்களை அறிந்திருக்க வேண்டும். அப்படி என்னென்ன விஷயங்கள் அறிந்திருக்க வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு அவர்களின் திருமண வாழ்க்கை குறித்து பல கனவுகள் இருக்கும். ஒரு ஆண் திருமணம் செய்ய முடிவு செய்யும்போது நிறைய விஷயங்கள் அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் திருமணம் என்பது வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டிய ஒரு உறவாகும். இந்த உறவு காதலுடன் நிறைந்து இருக்கும். எனவே திருமணத்துக்கு தாயாராக இருக்கும் ஆண் இந்த 5 விஷயங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

குடும்பம்:

ஒரு ஆண் தான் விரும்பும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால், இருவீடாருடைய குடும்பம் இந்த திருமணத்தை எப்படி பார்க்கிறார்கள், மேலும் அவர்கள் உணர்வது என்ன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் உங்கள் பெற்றோர் உங்களது திருமணம் குறித்து என்ன மாதிரியான திட்டங்களை வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்வது அவசியம். அப்போது தான் உங்களுடைய செயல்திட்டங்களை வெற்றியுடன் கொண்டு செல்ல முடியும்.

Tap to resize

பரிமாற்றம்:

திருமண வாழ்வில் தகவல் பரிமாற்ற மிகவும் முக்கியம். திருமணத்தை குறித்து உங்களுக்கு ஏற்படும் உணர்வுகள், எதிர்பார்ப்புகள், கவலைகள் என எதுவாக இருந்தாலும் அதை பகிர்ந்து கொள்வது நல்லது. ஏனெனில் இரண்டு பேரின் கருத்துக்களும் அதில் இருக்கும் பாதகங்களும் விவாதிக்கப்பட்டு சிறந்த முடிவை எடுக்க உதவியாக இருக்கும்.

நேரம்:

நீங்களும் உங்கள் துணையும் திருமணத்திற்குத் தயாராக இருக்கிறீர்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் சிலர் அவசரப்பட்டு திருமணம் செய்து கொள்வதால் பிரச்சனைகளை சந்திக்கின்றன. எனவே திருமணம் செய்து கொள்வதற்கு சரியான நேரம் இதுவா? என்று அறிந்த பின்னரே திருமணம் செய்து கொள்ளுங்கள்.
 

இதையும் படிங்க: தினமும் ஒரு வெள்ளரி இவ்வளவு நன்மைகளா! ஆனா வெள்ளரிகாய் சாப்பிடும்போது இதை மட்டும் சாப்பிடாதீங்க!

பொருளாதாரம்:

எல்லா வகை உறவுகளுக்கும் விரிசலையும், மோதலையும் உண்டாக்குவது பணம். குறிப்பாக இது
கணவன் - மனைவி உறவுக்கு பொருந்தும். ஆகையால் நிதி ஆதாரங்கள், அதற்கான திட்டமிடல் போன்றவற்றில் இருவரும் எப்படி என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஒருவருக்கொருவர் நிதி நிலைமை மற்றும் தேவைகள் குறித்து தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அதை அடைவதற்கு சரியான ஒரு வேலை இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். மேலும் குடும்பத்தின் மாத செலவுகள், வீடு மற்றும் குழந்தைகளுக்கான முக்கிய செலவுகள், சேமிப்பு எல்லாவற்றின் மீதும் கவனம் செலுத்த வேணடும்.

இலக்குகள்:

திருமண வாழ்க்கையில் இருவருக்கும் விளக்குகள் இருக்கும். இந்த லக்குகள் இருவருக்கும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே வாழ்க்கையை எளிதாக பயணம் செய்ய முடியும். இதில் தனி நபருக்கான சுதந்திரம் உண்டு. @குறிப்பாக குழந்தை பெற்றுக் கொள்வது, புதிய வீடு கட்டுவது என வாழ்க்கையின் எல்லா முடிவுகளிலும் அதன் இலக்கை இருவரும் சேர்த்து நகர்த்திச் செல்ல வேண்டும். இவை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பும் நபருக்கு இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.

Latest Videos

click me!