வேலைக்கு மற்றும் காலேஜுக்கு தினமும் செல்லும் போது லஞ்ச் பேக் எடுத்து செல்வது வழக்கம். ஆனால் அதில் சாப்பாடு, சாம்பார், எண்ணெய் பிசுக்கல் காரணமாக துர்நாற்றம் வீசும். உங்கள் லஞ்ச் பேக்கை எப்போதுமே ஃபிரெஷ்ஷாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்கள் இதோ.
தினமும் ஆபிஸ், காலேஜுக்கு லஞ்ச் பேக் கொண்டு செல்வது வழக்கம். அதில், குழம்பு, எண்ணெய் சிந்தி பேக் உள்ள கறையாகி, கெட்ட வாடை வீசும். வெறும் துணியால் துடைத்தால் இந்த வாடை போகாது. பேக்கை சுத்தம் செய்வது எப்படி? என்பதை பார்ப்போம்.
27
பழைய டூத் பிரஷ்
மூலைகளில் மற்றும் தையல் போட்ட இடங்களில் சின்ன சின்ன சாப்பாட்டு துகள்கள், சாம்பார் கறைகள் படிந்திருக்கும். இதை சரி செய்ய ஒரு பழைய டூத் பிரஷ் எடுத்து, கொஞ்சம் சோப்புத் தண்ணீரில் முக்கி எடுத்து மூலைகளைத் தேய்த்து சுத்தம் செய்யலாம்.
37
என்சைம் க்ளீனர்
ஒருவேளை லஞ்ச் பேக்கில் பால் அல்லது இறைச்சி குழம்பு கறை இருந்தால் சாதாரண சோப்பை விட என்சைம் க்ளீனர் (Enzyme Cleaner) ரொம்ப நல்லா வேலை செய்யும். இது கெட்ட வாடை வராமல் தடுத்து, பாக்டீரியாக்களை முற்றிலுமாக அழிக்கும்
சில லஞ்ச் பேக் தண்ணீரில் ஊறவைக்க முடியாத வகையை சேர்ந்ததாக இருந்தால் சூடான நீரில் காட்ட வேண்டும். இது பேக்கில் உள்பக்கத்தில் ஒட்டியிருக்கின்ற பிசுபிசுப்பை இளகச் செய்து, கிருமிகளைக் கொல்லவும் உதவும். நம்ம வீட்டில் உள்ள இட்லி பாத்திரத்தில் இருந்து வருகின்ற ஆவி கூட இதுக்கு போதும்.
57
பேக்கிங் சோடா
லஞ்ச் பேக்கில் உள்ள இருக்கின்ற கெட்ட வாடை போகவே இல்லையா? ஒரு சின்ன கிண்ணத்தில் பேக்கிங் சோடா அல்லது கரித்துண்டை வெத்து பேக் ஜிப்பை மூடி இரவு முழுக்க விட்டுவிடுங்கள். இது பேக்கில் உள்ள எல்லா கெட்ட வாடையையும் உறிஞ்சிடும்.
67
ஜிப்பில் பிசுபிசுப்புகள்
லஞ்ச் பேக்கில் உள்ள ஜிப்பில் பிசுபிசுப்பு இருந்தால் அது சரியாக வேலை செய்யாது. ஒரு இயர்-பட்ஸ் (ear buds) வெத்து கொண்டு ஜிப்பில் உள்ள பற்களை நன்றாக சுத்தம்செய்ய வேண்டும். அதற்கு பிறகு கொஞ்சம் வேஸ்லின் (Vaseline) அல்லது மெழுகு தடவிய ஜிப் ஈசியா இயங்கும்.
77
பாக்டீரியாக்களை அழிக்கும் சூரிய ஒளி
லஞ்ச் பேக்கை துவைத்த பிறகு அதை அப்படியே உள்பக்கம் வெளியே வர மாதிரி திருப்பி, கொஞ்ச நேரம் வெயிலில் காய வைக்க வேண்டும். சூரிய ஒளி இயற்கையாகவே பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி கொண்டது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.