Garlic Water: பூண்டு தண்ணீரை தினமும் இப்படி குடித்து வந்தால் போதும்..வியப்பூட்டும் அற்புத பலன்கள் கிடைக்கும்!

First Published Sep 22, 2022, 11:51 AM IST

Garlic Water Health Benefits: பூண்டை பச்சையாகவோ சமைத்தோ, சாப்பிடுவது மட்டுமல்லாமல், அதன் தண்ணீரை குடிப்பது உடல் ஆரோக்கியத்தை நன்றாக மேம்படுத்த உதவுகிறது. 

நம்முடைய சமையல் அறையில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும் உணவுகளில், ஒன்று பூண்டி. இதில் பல வித மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. பூண்டு பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக, ஆண்களுக்கு பூண்டு வரப்பிரசாதமாக இருக்கிறது.  

இந்த பூண்டை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவது மட்டுமல்லாமல், அதன் தண்ணீர் குடிப்பதும் உடல் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் ஒரு டம்ளர் பூண்டு தண்ணீர் குடித்து வந்தால், நமது ஆரோக்கியத்திற்கு அபரிமிதமான நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்னெ என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

காலையில் வெறும் வயிற்றில் இந்த பூண்டு தண்ணீரை குடித்து வந்தால், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் வருவதற்கான ஆபத்து பெருமளவு குறைவது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பூண்டின் பண்புகள்

பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இவை பல நோய்களைத் தடுக்கின்றன. பூண்டில் வைட்டமின் பி1, வைட்டமின் சி, வைட்டமின் பி6, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளன. அதுமட்டுமின்று, இதில் மாங்கனீஸ், கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளது.

மேலும் படிக்க...Drinking water: ஆபத்து..! பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் யூஸ் பண்ணிறீங்களா..அப்படினா..! இதை முதலில் படிங்க...

வயிறு தொடர்பான பிரச்சனைகள்:

பூண்டு தண்ணீர் குடிப்பது பல வயிற்று பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. நீண்ட நாள் வயிற்று வலி, வாயு, பிடிப்புகள், வீக்கம், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. 

ஒருவருக்கு செரிமானம் தொடர்பான தொந்தரவு ஏற்பட்டால், அவர் தினமும் காலையில் பூண்டு தண்ணீரை குடிக்க வேண்டும். பூண்டு தண்ணீர் குடிப்பதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு நிவாரணம் கிடைக்கும். பூண்டு தண்ணீர் குடிப்பதால், ரத்த ஓட்டம் சீராக  இருக்கும். இதில் இதயத்திற்கு நன்மை செய்யும் அல்லிசின் என்ற கலவை உள்ளது.  

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பூண்டு தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சளி பிரச்சனையும் நீங்கும்.மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூண்டில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி உள்ளது, இவை இரண்டும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. 

மேலும் படிக்க...Drinking water: ஆபத்து..! பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் யூஸ் பண்ணிறீங்களா..அப்படினா..! இதை முதலில் படிங்க...

எப்படி தயார் செய்வது..?

முதலில் இரண்டு மூன்று பூண்டு பற்களைஉரித்து இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி  பாதியாகும் வரை நன்கு கொதிக்க வைக்கவும். இந்த வழியில் பூண்டின் அனைத்து சத்துக்களும் தண்ணீரால் உறிஞ்சப்படும். பிறகு இதில்,கருப்பு மிளகு மற்றும் கருப்பு உப்பு சேர்த்து இந்த தண்ணீரை காலை, மாலை இரண்டு வேளை குடிக்கலாம்.  

மேலும் படிக்க...Drinking water: ஆபத்து..! பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் யூஸ் பண்ணிறீங்களா..அப்படினா..! இதை முதலில் படிங்க...

click me!