இருப்பினும், இந்த மாதங்களில் வளைகாப்பு, நிலை வாசல் வைத்தல், காது குத்துதல் போன்ற சிறு சிறு சுப காரிங்களை செய்து கொள்ளலாம். ஏனெனில், இவை அந்தந்த மாதங்களில் கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்கும். இதனால் பெருமளவு நமது பூஜைகள், பித்ரு கடமைகள் பாதிக்காது. இருப்பினும், இந்த காலத்தில் பூமி பூஜை போடுவது, புது வீடு கிரகப்பிரவேசம் செய்வது, திருமணம் போன்ற பெரிய சுப நிகழ்ச்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நமக்கும் நம் சந்ததியினருக்கும் நன்மை தரும்.