சமையல் மேடையில் படிந்துள்ள உப்பு கறையை நொடியில் போக்க., குப்பையில் தூக்கி போடும் 1 ரூபாய் ஷாம்பு கவர் போதும்..

First Published Sep 22, 2022, 8:01 AM IST

Shink cleaning tips: சமையல் மேடை, வாஷ்பேஷன் போன்றவற்றில் வெள்ளையாக பூத்திருக்கும் இந்த உப்பு கறையை சுலபமாக போக்க, இனிமேல் இந்த ஒரு கவரை குப்பையில் தூக்கி போடாமல் பயன்படுத்தி பாருங்கள்.

நம்முடைய வீட்டில் இருக்கும் அனைத்து இடங்களை காட்டிலும், சமையல் அறை, பாத்ரூம் போன்றவற்றில் வெள்ளை வெள்ளையாக உப்பு கறை படிந்திருக்கும். இன்று நம்மில் பெரும்பாலான வீடுகளில், உப்பு தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருவதால், குறைந்த நாட்களிலே உப்பு கறை படிய ஆரம்பிக்கும். 

அதுமட்டுமின்று, தண்ணீர் வரக்கூடிய டேப், வாஷ்பேஷன் மற்றும்  பாத்ரூம் டேப் போன்றவற்றிலும் உப்புக்கறை படிந்திருக்கும். பொதுவாகவே, இந்த கறையை நீக்குவது நமக்கு மிகவும் சிரமமான ஒன்றாகும். இதனால், கடைகளில் விலை கொடுத்து பல்வேறு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். 

மேலும் படிக்க...வீட்டில் ஒரு கைப்பிடி உப்பு இருந்தால் போதும்..தீராத வினையெல்லாம் தீர்க்கும், நம்ப முடியாத அற்புதம் நடக்கும் ..

இப்படி செய்வதால், உங்களின் எனர்ஜி  வீணடிக்கப்பட்டு, பணமும் செலவு ஆகுமே தவிர, உப்பு கறை போகவே போகாது. எனவே, இப்படி ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், நீங்கள் குளித்து விட்டு தூக்கி எறியும் காலியான 1 ரூபாய் ஷாம்பு கவரை வைத்து இந்த உப்பு  கறையை சுலபமாக நீக்கலாம். அது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதற்கு நீங்கள் குளித்து முடித்து விட்டு குப்பையில் தூக்கி எறியும் காலியான ஷாம்பு கவரை சேகரித்து எடுத்து கொள்ளுங்கள். நாம் என்னதான் குளிக்கும் போது ஷாம்பு பயன்படுத்தினாலும், அதன் உள் பக்கத்தில் சிறிது ஷாம்பு ஒட்டு கொண்டு இருக்கும். அப்படி இல்லையென்றால், காலியான ஷாம்பு பாட்டிலில் இருந்து 1  டீஸ்புன் ஷாம்பூ எடுத்து சுத்தம் செய்ய பயன்படுத்தி கொள்ளுங்கள்.  

முதலில் உப்பு கறை படிந்த இடத்தில்  ஒரு காட்டன் துணியை வைத்து நன்றாக ஈரம் இல்லாமல் துடைத்து  விடுங்கள். இரண்டு நிமிடத்தில் சமையல் மேடை காய்ந்தவுடன், இப்படி வெள்ளையாக பூத்திருக்கும் இடத்தில் முதலில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து எல்லா இடங்களிலும் படும்படி தேய்த்து விட்டு ஊற விடுங்கள்.

மேலும் படிக்க...வீட்டில் ஒரு கைப்பிடி உப்பு இருந்தால் போதும்..தீராத வினையெல்லாம் தீர்க்கும், நம்ப முடியாத அற்புதம் நடக்கும் ..
 

எலுமிச்சைச்சாறு ஐந்து நிமிடம் வரை அப்படியே ஊறட்டும். அதன் பின்பு ஒரு ஸ்டீல் நாரை வைத்து தேய்த்தால் வெள்ளை நிறத்தில் முதல் பாக உப்பு கரை நீங்கிவிடும். மீண்டும் அதே இடத்தில், இந்த ஷாம்புக் கவரை போட்டு நன்றாக தேய்க்க வேண்டும். இல்லையா ஒரு ஸ்பூன் ஷாம்புவை ஊற்றி ஒரு ஸ்டீல் நாரை கொண்டு தேய்ங்க வெள்ளை நிறத்தில் உப்பு கறை சுலபமாக நீங்கி வந்துவிடும்.

இதே போலத்தான் நீங்கள் சமையல் மேடை மட்டுமின்று, வாஷ்பேஷன் மற்றும்  பாத்ரூம் டேப் போன்று உப்பு கறை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் போட்டு தேய்ந்து விடுங்கள். உப்பு கறை சுலபமாக நீங்கிவிடும். கண்டிப்பாக இதை உங்கள் 
வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.

மேலும் படிக்க...வீட்டில் ஒரு கைப்பிடி உப்பு இருந்தால் போதும்..தீராத வினையெல்லாம் தீர்க்கும், நம்ப முடியாத அற்புதம் நடக்கும் ..
 

click me!