Drinking water: ஆபத்து..! பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் யூஸ் பண்ணிறீங்களா..அப்படினா..! இதை முதலில் படிங்க...

First Published Sep 22, 2022, 10:13 AM IST

Drinking water: தண்ணீர் கெட்டுப்போகாதது என்றாலும் கடைகளில், விற்கப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். அது, தண்ணீருக்கானது இல்லை, அந்த பாட்டில்களுக்கானது. 

நம்முடைய முன்னோர்கள் காலத்தில் எல்லாம், பானைகளில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால், இன்றைய நவீன காலத்தில் நம்முடைய பெரும்பாலான வீடுகள், அலுவலகங்கள் என என எங்கு பார்த்தாலும், பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பது பழக்கமாகிவிட்டது.

 மேலும் படிக்க...சமையல் மேடையில் படிந்துள்ள உப்பு கறையை நொடியில் போக்க., குப்பையில் தூக்கி போடும் 1 ரூபாய் ஷாம்பு கவர் போதும்..

ஆனால் சமீபத்திய அறிக்கையின்படி, நீங்கள் வாட்டர் கேன்களில் அடைத்து வைத்து தண்ணீரை பருகுவது ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் கெட்டுப்போகாதது என்றாலும் கடைகளில், விற்கப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். அது, தண்ணீருக்கானது இல்லை, அந்த பாட்டில்களுக்கானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 மேலும் படிக்க...சமையல் மேடையில் படிந்துள்ள உப்பு கறையை நொடியில் போக்க., குப்பையில் தூக்கி போடும் 1 ரூபாய் ஷாம்பு கவர் போதும்..

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை குடிப்பதால் உண்டாகும் தீமைகள்:

காலாவதி தேதிக்கு பின் நேரடியாக சூரிய ஒளியில் அந்த பாட்டில்கள் படும் பட்சத்தில் அதில் இருக்கும் BPA என்ற ரசாயணம் தண்ணீரில் கலந்து இதய பாதிப்பு, புற்றுநோய், நீரிழிவு, உடல் பருமன், கருவுறுதல் பிரச்சினை, போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். 

அதனால், முடிந்தவரை பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை குடிப்பதால் நோயெதிர்ப்பு அமைப்பு பெரிதும் பாதிக்கப்படும். பாட்டில்களில் உள்ள ரசாயனங்கள் தண்ணீர் மூலம் உடலுக்குள் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை சீர்குலைத்து விடும். பிளாஸ்டிக்கில் பித்தலேட்ஸ் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. அது கலக்கப்படும்.

plastic

பிளாஸ்டிக்கில் பித்தலேட்ஸ் என்ற வேதிப்பொருள் இருப்பதால், பிளாஸ்டிக் பாட்டில்களில் நீரை அடைத்து பருகி வந்தால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும். விந் தணுக்களின் எண்ணிக்கை குறையும்.  

ஒருவேளை பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர்  வாங்கினால் கவனிக்க வேண்டியவை:

இனிமேல், பாட்டில்களில் தண்ணீர் வாங்கும் போது அதன் காலாவதி தேதியை சரிபார்க்கவும். 

அதேபோன்று, தண்ணீர் கேன்களை அதிக நேரம் வெயிலில் இருந்தால் அதை வாங்க கூடாது.

 மேலும் படிக்க...சமையல் மேடையில் படிந்துள்ள உப்பு கறையை நொடியில் போக்க., குப்பையில் தூக்கி போடும் 1 ரூபாய் ஷாம்பு கவர் போதும்..

தண்ணீர் பாட்டில் நிழலில் 25 டிகிரி வெப்பநிலை இருக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 

click me!