Aries Palan: வாழ்கை முழுவதும் மேஷ ராசியின் விசேஷமான குணநலன்கள் பற்றி தெரியுமா? இந்த விஷயத்தில் முழு பலன் உண்டு

Published : Sep 22, 2022, 09:09 AM ISTUpdated : Sep 23, 2022, 10:23 AM IST

Aries Sign Characteristic: வாழ்கை முழுவதும் மேஷ ராசியில் பிறந்தவர்களின் பொதுவான குணநலன்கள் பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

PREV
19
Aries Palan: வாழ்கை முழுவதும் மேஷ ராசியின் விசேஷமான குணநலன்கள் பற்றி தெரியுமா? இந்த விஷயத்தில் முழு பலன் உண்டு
Aries

மேஷ ராசியில் பிறந்தவர்களின் பொதுவான குணநலன்கள்:

தன்னம்பிக்கை அதிகம் உடையவர்கள். மேஷம் ராசியில் பிறந்தவர்கள் எதையும் சாதிக்கும் திறன் கொண்டவர்கள். மேஷம் ராசியினர்  தன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினருடன் சண்டையில் ஈடுபடுவார்கள். இருப்பினும், அவர்கள் மீது அன்பும் பாசமும் கொண்டவர்கள். எந்த துன்பம் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவுவார்கள்.  

 

 

29
Aries

நண்பர்களுடன் ஆழமான உறவு வைத்து கொள்வார்கள். நான்கு அல்லது ஐந்து சகோதரர்களுக்கு இடையில் இவர்கள் பிறந்திருந்தாலும், இவர்களின் அறிவு பலத்தால் இவர்களே முதல்வராக இருப்பார்கள். குறிப்பாக மேஷ ராசியில் பிறந்த பெண்கள் தன்னுடைய தாய், தந்தை மீது அதிக பாசம் உடையவர்கள். அவர்களுக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள். 
 

39
Aries

மேஷத்தில் பிறந்தவர்கள் சமூகத்தின் உறவு 

மேஷத்தில் பிறந்தவர்கள் சமூகத்தின் மத்தியில் புகழை விரும்பக்கூடியவர்கள். அதற்காக நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு கொண்டவர்கள். மேஷ ராசியில் பிறந்தவர்கள் எதிலும் சாதுர்யம் மிக்கவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசுவார்கள். மேஷம் ராசியில் பிறந்தவர்கள் குடும்பத்தை வழிநடத்தும் தன்மை கொண்டவர்கள். எந்த செயலையும் துணிவுடன் செய்பவர்கள். 

49
Aries

மேஷ ராசியில் பிறந்தவர்களின் உறவு:

ஆனால், மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் தன்னுடைய மனைவி அழகாகவும், தனக்கு கீழ்ப்படிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதேபோன்று, மேஷ ராசியில் பிறந்த பெண்கள் தன்னுடைய கணவர் தனக்கு முழு அங்கீகாரம் கொடுக்க வேண்டும். தன்னுடைய விருப்பு, வெறுப்புகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்டவர்கள். அதே நேரம், பிரச்சனைகள் வரும் போது விவேகத்துடன் கணவரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக நிற்பார்கள். எதிலும் பின் வாங்க மாட்டார்கள். குடும்ப பொறுப்புகளை சுமப்பவர்கள்.

59
Aries

மேஷ ராசியினர் தொழில் பலன்:

மேஷ ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் தனக்கு கீழே, ஆட்கள் இருந்து வேலை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உடையவர்கள். இவர்கள் தங்களை எதிலும், முன்னோடியாக நினைப்பார்கள். குறிப்பாக மேஷ ராசியில் பிறந்தவர்கள், அரசியல் வாதிகளாகவும், டாக்டர், இன்ஜினியர், போலீஸ், ராணுவம் போன்ற துறைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். 

மேலும் படிக்க...Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் தினசரி பலன், இன்று அதிர்ஷ்ட காற்று யார் பக்கம்..உங்கள் ராசிக்கு என்ன பலன்

69
Aries

ஆரோக்கியம்:

மேஷம், ராசியில் பிறந்தவர்கள் உடலை பிட்டாக வைத்து கொள்ள விரும்புவார்கள். உடலின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள். இருப்பினும் இவர்களுக்கு உஷ்ணம், வயிறு தொடர்பான நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. செவ்வாய் அதிபதியாக ஆட்சி செலுத்தும் இந்த மேஷ ராசியில்தான் சூரியன் உச்சம் பெறுகிறார். இந்த ராசியில் பிறந்தவர்களிடம் செவ்வாயின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால், எலும்பு தொடர்பான நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. 
 

79
Aries

மேஷ ராசிக்காரர்களின் பிடிவாதம்:

முன் கோபம் அதிகமாக இருக்கும், ஈகோ மனப்பான்மை கொண்டவர்கள். பொறுமை என்பதே மேஷ ராசிக்காரர்களுக்கு கிடையாது. நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு கொண்டவர்கள். இதனால் சில பிரச்சனைகளையும் சந்திப்பார்கள்.  

89
Aries

கவனமாக இருக்க வேண்டிய இடம்:

மேஷம் ராசியில் பிறந்தவர்கள் ஆதிக்கம் அதிகம் செலுத்துபவர்கள், என்பதால் எதிரிகளை அதிகள் உருவாகாமல் இருக்கலாம். சண்டை, சச்சரவுகளை குறைத்து கொள்வது நல்லது. 

மேலும் படிக்க...Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் தினசரி பலன், இன்று அதிர்ஷ்ட காற்று யார் பக்கம்..உங்கள் ராசிக்கு என்ன பலன்

99
Aries

ராசியான திசை: கிழக்கு 

ராசியான நிறம்: சிவப்பு, ஆரஞ்சு, போன்ற சிவந்த நிறத்தை  விரும்புவார்கள்.

அளவு: உயரமாக அளவு கொண்டவர்கள்.

மேலும் படிக்க...Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் தினசரி பலன், இன்று அதிர்ஷ்ட காற்று யார் பக்கம்..உங்கள் ராசிக்கு என்ன பலன்

Read more Photos on
click me!

Recommended Stories