Fenugreek seeds: இந்த உடல் நல பிரச்சனை இருப்பவரா நீங்கள்? அப்படினா! மறந்தும் கூட வெந்தயத்தை சாப்பிடக்கூடாது

Published : Sep 28, 2022, 12:37 PM ISTUpdated : Sep 28, 2022, 12:38 PM IST

Fenugreek seeds Side effect: வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால், இவற்றை சில உடல் உபாதைகள் இருப்பவர்கள் எடுத்து கொள்ள கூடாது. அவை என்னென்னெ பிரச்சனை என்பதை பார்க்கலாம். 

PREV
16
Fenugreek seeds: இந்த உடல் நல பிரச்சனை இருப்பவரா நீங்கள்? அப்படினா! மறந்தும் கூட வெந்தயத்தை சாப்பிடக்கூடாது

வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால், இவை சற்று கசப்பாக இருப்பதால், சிலர் இவற்றை சாப்பிட விரும்புவது இல்லை. ஆனால், நிச்சயம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள விரும்புபவர்கள் இதனை கண்டிப்பாக சாப்பிடுவார்கள். வெந்தயத்தை தொடர்ந்து உட்கொள்வது பல உடல்நலப் பிரச்சினைகளை குணப்படுத்தும். தொற்று அபாயமும் குறைகிறது.


மேலும் படிக்க...Trisha: 40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் திரிஷா...பொன்னியின் ராணி குந்தவையின் ஃபிட்னஸ் ரகசியம் இது தான்..!

26

வெந்தயத்தின் பயன்கள்:

வெந்தயம் சிறிது கசப்பாக இருந்தாலும், பல உடல்நலப் பிரச்சனைகளைக் குறைப்பதில் திறம்பட செயல்படுகிறது. வெந்தயத்தில் இரும்பு, மெக்னீசியம், நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இவை அதிக எடை, இரத்த சர்க்கரை அளவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. 

 

36

வெந்தய தண்ணீரை தினமும் குடிப்பதால் செரிமான செயல்பாடு மேம்படும். எடையும் வேகமாக குறைகிறது. மலச்சிக்கல் நீங்கும். மாதவிடாய் வலி மற்றும் பிரச்சனைகளும் குறையும். முழங்கால் வலி உள்ளவர்களுக்கும் வெந்தயம் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இவை மூட்டு வலியைக் குறைக்கும் என்று பல ஆய்வுகள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன. 

மேலும், இந்த வெந்தய விதைகள் அஜீரணம் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளையும் குறைக்கிறது. இருப்பினும், சிலர் வெந்தயத்தை சாப்பிடவே கூடாது. அவர்கள் யார் என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க...Trisha: 40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் திரிஷா...பொன்னியின் ராணி குந்தவையின் ஃபிட்னஸ் ரகசியம் இது தான்..!
 

46

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணிகள் வெந்தயத்தைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெந்தயம் சாப்பிடுவது கர்ப்பிணிகளுக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இந்த விதைகள் வயிற்றில் வளரும் கருவில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதனால், குழந்தைக்கு ஊனம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கர்ப்பிணிகள் வெந்தயத்தை எடுத்துக்கொள்ளவே கூடாது. 

56

சுவாச பிரச்சனை

வெந்தயத்தை உட்கொள்வதால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளக் கூடாது. எனவே, நீங்கள் சுவாச பிரச்சனைக்கு மருந்துகளை பயன்படுத்தினால், தவறுதலாக கூட வெந்தயத்தை உட்கொள்ளாதீர்கள். ஏனெனில் இந்த வெந்தய விதைகள் மருந்துகளின் தாக்கத்தை குறைத்து, உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளை தருகிறது. 

66

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் வெந்தயத்தை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில், இந்த வெந்த விதைகள் உடலில் இரத்த அழுத்தத்தை  அதிகப்படுத்துகிறது. குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இதை தேர்வு செய்யலாம். எனவே, உயர் இரத்த அழுத்த நோயாளிகள் இந்த வெந்தய விதைகளில் இருந்து சற்று விலகி இருக்க வேண்டும். மறந்தும் கூட வெந்தயத்தையும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. 

மேலும் படிக்க...Trisha: 40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் திரிஷா...பொன்னியின் ராணி குந்தவையின் ஃபிட்னஸ் ரகசியம் இது தான்..!

Read more Photos on
click me!

Recommended Stories