அமெரிக்க சிறுநீரக சிறப்பு நிபுணர்களின் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் முடிவில், இரண்டு வருடங்கள் தொடர்ந்து கீட்டோ உணவு முறையில் இருந்தவர்களுக்கு சிறுநீரகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், சில வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது.
பேலியோ உணவு முறைக்கு வருவதற்கு முன்னர் முழு ரத்தப் பரிசோதனையும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்றவை வயிற்றுப்பகுதியில் எடுத்துப் பார்க்கப்படுகிறது. அதில் சிறுநீரகத்தில் கற்கள் அல்லது பாதிப்பு ஏதேனும் இருந்தால் அதற்கேற்ற மாதிரி புரதத்தின் அளவு குறைக்கப்படுகிறது.