Health tips - Headache: தீராத தலைவலி உங்களுக்கு ஏற்பட்டால்..இனிமேல் இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..

First Published Oct 5, 2022, 12:28 PM IST

Health tips - Headache: தீராத தலைவலி உங்களுக்கு ஏற்பட்டால், இயற்கை வழியில் அதனை சரிசெய்வதற்கு என்ன செய்யலாம்? என்பதை பார்க்கலாம். 

சிலருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். சிலருக்கு காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலி ஏற்படும். இந்த தலைவலி வந்தாலே எரிச்சல் அதிகம் இருக்கும். ஏனெனில், எந்த வேலையையும் இந்த தலைவலி செய்யவிடாது. இதனால், அன்றைய நாளையே அது பாதித்து விடக் கூடும். 

 மேலும் படிக்க..Weight loss: உடல் எடையை குறைத்து ஒல்லியாக வேண்டுமா..? இந்த டீடாக்ஸ் பானங்களை முயற்சி செய்து பாருங்கள்..

தூக்கமின்மை காரணமாக அடிக்கடி தலைவலி ஏற்படலாம். அதே சமயம், பலருக்கு மன அழுத்தம் காரணமாகவும், தலைவலி பிரச்சனை அடிக்கடி ஏற்படலாம். அப்படியான, தலைவலியைப் போக்க மாத்திரையை விழுங்குவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். 

ஆனால், தலைவலிக்கு வலி நிவாரண மாத்திரைகள், ஜெல்களைப் பயன்படுத்துவது சிறுநீரகம், இதய பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். அப்படியானல் இயற்கை வழியில் தலைவலியைப் போக்க என்ன செய்யலாம்? என்பதை பார்க்கலாம். 

 தண்ணீர் குடித்தல்: 

தலைவலி வந்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டிய விஷயம் நிறைய தண்ணீர் குடிப்பது. உடலில் நீர்ச்சத்து குறைவதாலும் தலைவலி ஏற்படும். முடிந்தால், உங்கள் உடல் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் பெற தண்ணீரில் சிறிது உப்பு கலந்து குடிக்கலாம்.  

அதேபோன்று, மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது பட்டை. தினமும் மாலை வேளையில் பட்டை சேர்த்த பிளாக் டீ அருந்திவந்தால் சைனஸால் உண்டாகும் தலைவலி நீங்கும்.

headache

 அமர்ந்திருக்கும் முறை:

இன்றைய இன்டர்நெட் காலத்தில், குனிந்து மொபைலைப் பார்க்கும்போது கழுத்து மற்றும் முதுகின் மேல் பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனாலும் தலைவலி ஏற்படலாம். எனவே, எப்போதும் நேராக நிமிர்ந்து உட்காரா வேண்டும். அடிக்கடி, தலையை அசைக்க வேண்டும்.  

 மேலும் படிக்க..Weight loss: உடல் எடையை குறைத்து ஒல்லியாக வேண்டுமா..? இந்த டீடாக்ஸ் பானங்களை முயற்சி செய்து பாருங்கள்..

காற்று  

ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற காற்று குறைவதாலும், ஒருவருக்கு தலைவலி வரும். எனவே, ஜன்னலைத் எப்போதும் திறந்து வைப்பதுடன் காற்றோட்டமான அறையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.  

உணவுகளில் மாற்றம்:

நாள் முழுவதும் வெயிலில் அலைந்து வேலைசெய்பவர்கள், சிப்ஸ், ஜாம், எண்ணெயில் பொறித்த உணவுகள், மது, போன்ற சில வகை உணவுகளைத் தவிர்த்துவிட்டாலே இந்தப் பிரச்னையில் இருந்து தப்பித்துவிடலாம்.

 வெளிச்சம்  

இரவில் அதிகப்படியான வெளிச்சம், வேளை செய்யும் லேப்டாப் போன்றவற்றில் அதிகப்படியான வெளிச்சம் போன்றவை உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும். குறிப்பாக எல்இடி விளக்குகள் கண்களுக்கு பிரச்னை ஏற்படுத்தக்கூடியவை. இது தலைவலியை உண்டு பண்ணும்.  எனவே, கண்களுக்கு கூசக்கூடிய அல்லது அதிக ஒளி கொண்ட விளக்குகளை அகற்றி விடுங்கள். 

வெளியே செல்லுங்கள் 

இயற்கை உங்கள் மனநிலையை மேம்படுத்த, நீங்கள் எந்த வேலை செய்தாலும் ஓய்வு எடுக்க வெளியில் செல்வது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. ஏனெனில், இது மன அழுத்தத்தினால்தான் பெரும்பாலும் தலைவலி வருகிறது. 
 
நாள்பட்ட தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 

 மேலும் படிக்க..Weight loss: உடல் எடையை குறைத்து ஒல்லியாக வேண்டுமா..? இந்த டீடாக்ஸ் பானங்களை முயற்சி செய்து பாருங்கள்..

click me!