வெறும் 2 கிராம் பூசணி விதைகள் சாப்பிட்டால் போதும்..மாரடைப்பின் அபாயம் குறைந்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்..

First Published Oct 5, 2022, 11:43 AM IST

Pumpkin Seeds Benefits: சிலருக்கு பூசணிக்காய் மிகவும் பிடிக்கும். ஆனால், அதன் விதைகளில் வேறு எந்தக் காய்கறிகளிலும் இல்லாத சில சத்துக்கள் இருப்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

பூசணி மிகவும் நன்மை பயக்கும் காய்கறி என்றாலும், அதன் விதைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. பூசணிக்காய் வயிற்றில் இருந்து இதயம் வரை பல நோய்களை குணப்படுத்தும் திறன் கொண்டது. இந்த காய்கறி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் அதன் விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூசணி விதைகளை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 
 

ஆராய்ச்சியின் படி, பூசணி விதைகள் இன்சுலின் அளவை கட்டுப்படுத்துவதால் அவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இல்லையென்றால், இளம் வயதிலேயே சர்க்கரை வியாதி, இதய கோளாறு, விந்தணு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் வந்து தொல்லை கொடுக்கும்.

பூசணி விதைகளில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின் சி, வைட்டமின் கே, பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளன, இது நம் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, தூங்கும் முன் சில பூசணி விதைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.  ஆம், இரவில்  பூசணி விதைகளை உட்கொள்வது மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் தூக்கத்தை மேம்படுத்துகிறது.
 

மேலும் படிக்க..Weight loss: உடல் எடையை குறைத்து ஒல்லியாக வேண்டுமா..? இந்த டீடாக்ஸ் பானங்களை முயற்சி செய்து பாருங்கள்..

இதய நோய்களுக்கு நல்லது:

இன்றைய காலத்தில் இதய நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆரோக்கியமான பொருட்களை உட்கொள்வது அவசியம். மாரடைப்பைத் தவிர்க்க, தினமும் 2 கிராம் பூசணி விதைகளை உட்கொள்ள வேண்டும். பூசணி விதைகளில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளது, இது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கீல்வாதம்:

கீல்வாதத்தில் நிவாரணம் பெற நீங்கள் பூசணி விதைகளை உட்கொள்ளலாம், ஏனெனில் இது ஒரு இயற்கை மூலிகையாக செயல்படுகிறது மற்றும் வலியிலிருந்து நிவாரணம் தருகிறது. இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் தடையற்ற குடல் செயல்பாடு போன்ற முக்கியமான உடலியல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை உருவாக்க உதவுகிறது மற்றும் உங்கள் தசைகளுக்கு சக்தி அளிக்கிறது. 
 

நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த:

பூசணி விதைகளில் துத்தநாகம் நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், வைரஸ், சளி, இருமல், போன்ற தொற்றுநோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இது தவிர, மனச்சோர்வை நீக்குவதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

சருமம் பராமரிப்பு:

இவற்றை நீங்கள்  சூப் அல்லது சாலட்டுடன் சேர்த்து சாப்பிட்டு பலன் பெறலாம். மேலும், பூசணி விதைகள் செல்களைப் புதுப்பித்தல், சருமச் சேதத்தை சரிசெய்து ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்றவற்றை செய்கிறது.

மேலும் படிக்க...Pumpkin: ஆண்களின் விந்தணு அதிகரிக்க பூசணி விதை பெஸ்ட்...நன்மைகள் ஏராளம் கொண்ட அதிசய விதை!

click me!