Weight loss: உடல் எடையை குறைத்து ஒல்லியாக வேண்டுமா..? இந்த டீடாக்ஸ் பானங்களை முயற்சி செய்து பாருங்கள்..

First Published | Oct 5, 2022, 10:49 AM IST

Weight loss Tips: டீடாக்ஸ் பானங்களை உங்களது உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உடலில் இருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறுவதுடன், எடை இழப்பிற்கும் உதவியாக இருக்கும்.

உடல் எடை அதிகரிப்பு என்பது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. ஒருவர் உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிப்பது அவசியம். இல்லையென்றால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். அப்படியாக, உடல் எடையை குறைக்க தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். அதற்கான பானங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.  

 மேலும் படிக்க..Left side sleeping: தூங்கும் போது ஏன் இடது பக்கம் தூங்குது நல்லது..? இதனால் உண்டாகும் பலன்கள் என்ன.?

எலுமிச்சை, வெள்ளரி டீ:

 இந்த மூலிகை தேநீர் எடை குறைப்பு மட்டுமின்றி உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றவும் செரிமானத்திற்கும், உதவுகிறது. மேலும், கோடை காலத்தில் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும்  உதவுகிறது. 

இந்த தேநீர் தயாரிக்க உங்களுக்கு எலுமிச்சை 2 முதல் 3,  தண்ணீர்  1 லிட்டர்,  வெள்ளரி 1, புதினா இலைகள் -5 கொண்டு தயாரிக்கப்படுகிறது.

 மேலும் படிக்க..Left side sleeping: தூங்கும் போது ஏன் இடது பக்கம் தூங்குது நல்லது..? இதனால் உண்டாகும் பலன்கள் என்ன.?

Tap to resize

ஸ்ட்ராபெரி டீடாக்ஸ்:

 இது உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இந்த டீடாக்ஸ் பானத்தை தயாரிப்பதற்க்கு 1 லிட்டர் தண்ணீ ரில் ,ஸ்ட்ராபெர்ரிகள் -4,  எலுமிச்சை 3, ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் மற்றும் சில துளசி இலைகள் சேர்த்து ஒரு நாள் முவதும் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு ஊறிய தண்ணீரை மறுநாள் காலையில் குடிக்கவும்.

இந்த  டீடாக்ஸ் பானத்தில், வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் போன்ற தாதுக்கள்  போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பானத்தில்  துளசி சேர்ப்பது வாய் துர்நாற்றத்தை விரட்டவும், செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும், துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 

மாம்பழம், பைன் ஆப்பிள்  

பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த டீடாக்ஸ் பானம், ஒவ்வொரு துளியிலும் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்துள்ளது. இந்த தேநீர் தயாரிப்பதற்கு 1 லிட்டர் தண்ணீரை எடுத்து, அதில் 1/2 கப் நறுக்கிய மாம்பழம் மற்றும் அன்னாசி, 3,எலுமிச்சை துண்டுகள் 4, போன்ற எல்லாவற்றையும் கலந்து தயார் செய்ய வேண்டும்.

 மேலும் படிக்க..Left side sleeping: தூங்கும் போது ஏன் இடது பக்கம் தூங்குது நல்லது..? இதனால் உண்டாகும் பலன்கள் என்ன.?

மசாலா தேநீர்:

மசாலா  தேநீர் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இப்போது, சில இலவங்கப்பட்டை குச்சிகள், ஏலக்காய் காய்கள் மற்றும் இஞ்சி சேர்த்து சில நிமிடங்கள் ஊற வைத்து குடிக்க வேண்டும்.

இந்த மசாலா தேநீர் உங்களுக்கு கூடுதல் சுவையை தருகிறது. இந்த காரமான தேநீர் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், வீக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. குளிர்கால நேரங்களில் இந்த டீ தினமும் பருகுவதன் மூலம் தொண்டைக்கட்டு, இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது

Latest Videos

click me!