Hair fall reason in Tamil: வழுக்கை விழும் அளவிற்கு உங்கள் தலைமுடி கொட்டுதா..? என்ன காரணம் தெரியுமா..?

First Published Oct 5, 2022, 10:00 AM IST

Hair fall reason in tamil: ஆண்கள், பெண்கள் இருவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை பெரும் மன உளைச்சலை தருகின்றது. ஒரு சில சமயங்களில் ஆண்களின் திருமணம் தடை ஆவதற்குக் கூட முடி உதிர்வு மிக முக்கிய காரணமாக அமைகிறது.  
 

hair falling

ஆண்கள், பெண்கள் இருவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை பெரும் மன உளைச்சலை தருகின்றது. நடைமுறை வாழ்வில் எப்போதும் முடி உதிர்தலை தவிர்ப்பதில் பெண்களை விட ஆண்களுக்குதான் அக்கறை அதிகம். காரணம், பெண்களுக்கு கொட்டும் முடிக்கு இணையாக பெரும்பாலும் வளர்ந்துவிடுகிறது.

hair falling

ஆனால், ஆண்களுக்கு அப்படியல்ல. 'போனால் போகட்டும் போடா' என்றும் இருக்க முடிவதில்லை. திருமணத்தின் போது முடி இல்லாத, முடி குறைவாக உள்ள ஆண்கள் வயது முதிர்ந்த தோற்றம் அளிப்பர். அவ்வளவு ஏன், ஒரு சில சமயங்களில் ஆண்களின் திருமணம் தடை ஆவதற்குக் கூட முடி உதிர்வு மிக முக்கிய காரணமாக அமைகிறது.  


மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..மேஷம் ராசிக்கு யோகம்..!கன்னி ராசிக்கு பிரச்சனை..உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

hair falling

முடி உதிர்தலுக்கான காரணங்கள்:

 மன அழுத்தம்:

மன அழுத்தம் அல்லது மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தாலே, மரபணு ரீதியாகவும், ஹார்மோன் ரீதியாகவும், கடுமையாக பாதிக்கப்பட்டு ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, முடி கொட்ட ஆரம்பிக்கும். எனவே, எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

hair falling

காற்று மாசு 

ஒருவர் வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போது, சிகை அலங்காரம் செய்து கொண்டு செல்வார்கள். ஆனால், வெளியில் சென்று வீட்டிற்கு வரும் போது கூந்தலில், காற்றில் உள்ள மாசுத் துகள்கள், புகை மற்றும் பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோ கார்பன்கள் போன்ற துகள்கள் முடியில் ஒட்டிக்கொள்கிறது. இதனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் முடி உதிர்தல்  பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. 

hair falling

உணவுகள்:

இன்றைய நவீன காலகட்டத்தில்,மேற்கத்திய உணவு கலாச்சாரம் அதிகரித்து காணப்படுகிறது.  இதனால், பலரும் ஊட்டச்சத்து உணவுகளைத் தவிர்த்து  ஜங்க் புட், பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகள் உட்கொள்கிறார்கள்.இதனால் ஊட்டச்சத்து குறைபாட்டினால் முடி உதிர்தல் ஏற்படுகிறது.  

hair falling

தூக்கமின்மை 

ஒருவருக்கு போதுமான அளவு துக்கம் இல்லாமல் இருப்பது, சரியான நேரத்தில் தூங்காதது உள்ளிட்டவை முடி உதிர்தலை உண்டாக்கும்.  நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 8 மணி நேரம் தூக்கம் அவசியமாகும். 

 புரதக் குறைபாடு 

உடலில் போதுமான அளவு புரதம் இல்லையெனில் இழந்த முடி செல்களுக்கு பதிலாக புதிய முடி செல்கள் உருவாகாது.  இதனால் முடி உதிர்தல் பிரச்சனைக்கு வழிவகுக்கும். 

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..மேஷம் ராசிக்கு யோகம்..!கன்னி ராசிக்கு பிரச்சனை..உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

hair falling


ஹீட்டர் உபயோகம்:

முடி உலர வைப்பதற்கும்,முடியை நாம் விரும்பும் வகையில் மாற்றி அமைப்பதற்கும் பலர் ஹீட்டர் உபயோகிக்கின்றனர். ஆனால் ஹீட்டரில் இருந்து வரும் வெப்பக் காற்று முடியை வலுவிழக்கச் செய்யும்.

கருத்தடை மாத்திரைகள்:

பெண்கள் பிறப்பு கட்டுப்பாட்டு மருந்துகளின் பயன்பாடு இருக்கும் போது  ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுகிறது. இதுவும் முடி உதிர்தலுக்கு ஒரு காரணம்.
 
 

hair falling

பரம்பரை குறைபாடுகள்:

 
முடி உதிர்வு பெரும்பாலும் மரபணு கோளாறுகளால் ஏற்படுகிறது. உங்கள் குடும்பத்தில் வழுக்கை இருந்தால்   , பரம்பரை ஜீன் காரணமாக உங்களுக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனை தவிர்த்து, ரத்த சோகை உள்ளவர்களுக்கு, தைராய்டு பிரச்சினைகள், ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் போதும் ஒருவருக்கு முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.

hair falling

 கர்ப்பமடைதல் 

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் காரணமாக முடி வளர்ச்சி சற்று அதிகமாக இருக்கும். ஆனால், பிரசவத்திற்குப் பிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு இயல்பு நிலைக்கு வந்ததும், முடி மீண்டும் உதிரத் தொடங்குகிறது. இது இயற்கையான உடல் மாற்றங்களில் ஒன்றாகும்.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..மேஷம் ராசிக்கு யோகம்..!கன்னி ராசிக்கு பிரச்சனை..உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

click me!