Joint pain: மூட்டு வலி, கால் வலி பிரச்சனைக்கு...நிரந்தர தீர்வு தரும் ஆயுர்வேத மருந்தை பயன்படுத்துங்கள்..!

First Published Oct 4, 2022, 8:02 AM IST

Joint pain: மூட்டு வலி, கால் வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு, மூட்டு வலியை போக்கும் எளிமையான வீட்டு வைத்திய முறைகளை காணலாம்.

மூட்டுவலி நோயாளிகளின் பொதுவான பிரச்சனை மூட்டு வலி மற்றும் வீக்கம் ஆகும்.  குறிப்பாக 40 வயதைக் கடந்த நபர்களுக்கு மூட்டு வலி பிரச்னையும் அதிகரிக்கிறது. மாறிவரும் வாழ்க்கை முறையில் உணவு பழக்கத்தில், கவனம் செலுத்தினால் மூட்டு வலி போன்ற எந்த வித பிரச்சனையும் வராது. இதனைப் போக்குவதற்கு பலர் பல வைத்தியங்களை செய்தாலும் எளிமையான வீட்டு வைத்தியத்திலேயே மூட்டு வலியை போக்குவதற்கு வழிகள் இருக்கின்றன. 

மேலும் படிக்க..Left side sleeping: தூங்கும் போது ஏன் இடது பக்கம் தூங்குது நல்லது..? இதனால் உண்டாகும் பலன்கள் என்ன.?
 

1. மூட்டு வலி, கால் வலி பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயுடன் வெட்டி வேரை கலந்து நன்றாக காய்ச்சி வலி உள்ள இடங்களில் தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

2. கொட்டை நீக்கிய கடுங்காய், வெட்டி வேர் இரண்டையும் கொதி நீரில் ஊற வைத்து, மறுநாள் அதனை அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் மறைந்து போய் விடும்.

மேலும் படிக்க..Left side sleeping: தூங்கும் போது ஏன் இடது பக்கம் தூங்குது நல்லது..? இதனால் உண்டாகும் பலன்கள் என்ன.?
 

3. ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து பாதிக்கப்பட்ட முழங்காலில் தினமும் இரண்டு முறை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

4. இஞ்சியில்  ஜின்ஜெரோல் எனப்படும் ஒரு கலவை இருக்கிறது. இது இயற்கையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது. முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் பெற நீங்கள் இஞ்சி தேநீர் தயாரித்து தினமும் இரண்டு முறை குடிக்கலாம்.

மேலும் படிக்க..Left side sleeping: தூங்கும் போது ஏன் இடது பக்கம் தூங்குது நல்லது..? இதனால் உண்டாகும் பலன்கள் என்ன.?
 

5. ஆப்பிள் சைடர் வினிகரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் தரும். ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து காலையில் குடிக்கலாம்.

6. எப்சம் உப்பில் மெக்னீசியம் சல்பேட் உள்ளது, இவை ஒரு வலி நிவாரணி ஆகும். இதை பயன்படுத்துவது இது வீக்கத்தைக் குறைத்து வலியைக் குறைக்கிறது.

7.  காய்ச்சலுக்கு பிறகு ஏற்படும் உடல் சோர்வு நீங்க, வெட்டி வேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து விடலாம்.

click me!