அஸ்வகந்தா தேநீர்:
மிக முக்கியமான ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றான அஸ்வகந்தா தேநீரை காலை, மாலை இரு வேளை பருகலாம். இது மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், இந்த தேநீர் தூக்கம் பிரச்சனையால் போராடுபவர்களுக்கு இரவில் நிம்மதியான தூக்கத்தை பெற உதவுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.