
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்களுக்கு மட்டுமல்ல, மரபணு, உடல் பருமன் உள்ளிட்ட பல காரணங்களால் குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோயை முழுமையாக ஒழித்து விட எந்த வழிகளும் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் இதனை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதன் மூலம் மற்ற பாதிப்புகளையும் ஏற்படாமல் தடுக்கலாம்.
சர்க்கரை நோய் என சொல்லப்படும் நீரிழிவு நோய் உணவு பழக்கவழக்கங்கள், போதுமான உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, மரபணு உள்ளிட்ட காரணங்களால் நம் ரத்தத்தில் காணப்படும் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது. இதனை கட்டுப்படுத்த முறையாக மருந்துகள் எடுத்துக் கொள்ளாவிட்டால் அடுத்தடுத்த விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் இந்த 5 வகையான காலை உணவுகள் தான்..! லிஸ்ட் இதோ..!!.
சர்க்கரை வியாதி ஆரம்ப காலகட்டத்தில் இயற்கை முறையில் கட்டுக்குள் வைத்துக் கொள்ளக் கூடியது தான். ஓரளவு நம்முடைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம். அதிலும் எந்த காசும் செலவில்லாமல் இது சாத்தியம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். வேப்பிலைகளுக்கு இந்த ஆற்றல் உண்டு.
வேப்ப இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் முற்றிய வேப்பிலைகளை விட கொழுந்து இலைகள் தான் அதிக பலன்களை கொண்டிருக்கின்றன. இவை நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். டைப் -2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேப்பிலையில் உள்ள சில பொருள்கள் நம் உடலில் சர்க்கரை நோய் தாக்கத்தை குறைக்கும். இது வெறும் சர்க்கரை நோய்க்கான மருந்து இல்லை. இதனால் உடலில் மற்ற பிரச்சனைகளும் தீரும்.
நாம் வேப்பிலையின் சாற்றை அருந்தும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். அது மட்டுமின்றி வயிற்றிலுள்ள சில கோளாறுகளும் முற்றிலும் மாறும். நமது வயிற்றில் இருக்கும் புழுக்களை அழித்து நச்சுக்களை நீக்கும் ஆற்றல் வேப்பிலைக்கு உண்டு. வேப்பிலை சாறு அருந்துவதால் நம்முடைய தோலும் பராமரிக்கப்படும். உடலின் நச்சுக்கள் நீங்குவதால் சருமம் பளபளப்பாகும்.
வேப்பிலையில் உள்ள நிம்பின், நிம்பினின், ஜெடூனின் போன்றவை சர்க்கரை நோய்க்கு எதிராக போராடக்கூடியவை. கல்லீரலை நன்கு இயங்கவும் பராமரிக்கவும் வேப்பிலைகளை பயன்படுத்தலாம். இதுவே சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் இன்சுலினை சுரக்கும். வேப்பிலைகளை காயத்தை குணமாற்றும் பண்புகள் உள்ளன. ஆகவே சர்க்கரை நோயால் புண்கள் ஆறாமல் அவதிப்படுபவர்கள் தினமும் வேப்பிலைகளை எடுத்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: நீரிழிவு நோயாளிகள் பீர் குடிப்பதால் என்ன மாற்றம் நிகழும் தெரியுமா?
எப்படி சாப்பிடலாம்?
வேப்பிலை உடலுக்கு நல்லது என்றாலும் அதனை குறிப்பிட்ட நேரத்தில் உண்பதால் கிடைக்கும் பலன்கள் அதிகம். காலையில் படுக்கையிலிருந்து எழுந்த பின்பு பல்துலக்கி விட்டு வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீருடன் வேப்பிலைகளை சாப்பிடுவது நல்ல பலன் அளிக்கும். கொழுந்து இலைகளை உண்பது கூடுதல் நல்லது.
சிலருக்கு கசப்பு சுவை பிடிக்காது. அவர்கள் வேப்பிலைகளை அப்படியே சாப்பிட தயங்குவார்கள். வேப்பிலைகளை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக அரைத்து சாறாக்கியும் அருந்தலாம். இதுவும் கடினமாக தோன்றினால் வேப்ப எண்ணையை நாக்கில் படாமல் விழுங்கினாலும் முழுபலன் பெறலாம். இதுவும் கடினமாக தோன்றினால் வேப்பிலைகளை நிழலில் உலர விட்டு அதனை பொடி செய்து சாப்பிடலாம். வேப்பிலைகளை வெந்நீரில் போட்டு காய்த்து வேப்பிலை தேநீராக அருந்தலாம்.
ஆனால் ஏற்கனவே சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசித்து விட்டு, மருந்துகளை அதற்கு தகுந்தாற்போல் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.