கை தவறி உப்பை கீழே கொட்டி விட்டால், மறந்தும் கூட இந்த தவறை செய்ய வேண்டாம்..மீறினால் கஷ்டம், வந்து சேருமாம்..

First Published Sep 16, 2022, 10:53 AM IST

Kal uppu pariharam in Tamil: உப்பினை கீழே கொட்டி விட்டால், வீட்டிற்கு தரித்திரம் வந்து சேரும் என்பது சாஸ்திர ரீதியாக ஐதீகம். எனவே, இனிமேல் உப்பை கையாளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இன்றைய பிஸியான வாழ்கை முறையில், அவசர அவசரமாக சமையல் செய்யும் போது கை தவறி உப்பு கீழே கொட்டுவது இயல்பான ஒன்று தான். ஆனால் உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் கொண்ட ஒரு பொருள் என்பதால், உப்பு கீழே கொட்டி விட்டால், வீட்டிற்கு தரித்திரம் வந்து சேரும் என்பது சாஸ்திர ரீதியாக ஐதீகம். எனவே, இனிமேல் உப்பை கையாளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

 மேலும் படிக்க...உங்களை பாடாய் படுத்தும் பிரச்சனைக்கு தீர்வு தரும் ஓமம்.., கஷ்டங்கள் விலகும், தெய்வம் வீட்டில் நுழையும்..

ஒருவேளை கை தவறி இப்படி உப்பு வீட்டில் கீழே கொட்டி விட்டால் என்ன செய்வது..? இதனால் கஷ்டங்கள் எதுவும் வராமல் இருக்க என்ன பரிகாரங்கள் செய்யலாம். என்பது குறித்த முழு விளக்கத்தையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

ஒருவேளை இப்படியான சம்பவங்கள் வீட்டில் நடந்து விட்டால், நம்முடைய வீட்டிற்கு அபசகுனமா..? வீட்டிற்கு பிரச்சனை வந்து சேர்ந்து விடுமோ என்று அச்சம் கொள்ள தேவையில்லை. கீழே கொட்டிய உப்பை எடுத்து மீண்டும் உப்பு ஜாடியில் போட்டு சமைக்க பயன்படுத்தவே கூடாது. மாறாக இந்த பரிகாரத்தை செய்து விட்டால் போதும் வீட்டின் எதிர்மறையான சக்திகள் விலகி ஓடும்.  எவ்வளவு உப்பு கீழே கொட்டினாலும் அந்த உப்பை எடுத்து ஒரு பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போட்டு விட வேண்டும். 

இந்த ஒரு பொருளை கலந்து வீடு துடைத்து பாருங்கள்..கரப்பான், பல்லி,எறும்பை விரட்டி, அழுக்கை போக்கி நறுமணம் வீசும்

ஆனால் மீண்டும் உப்பை கையில் எடுக்கும் போது அலட்சியமாக எடுக்கக் கூடாது. மீண்டும், மீண்டும் சிந்த விட கூடாது. அதில் இருந்து ஒரு கைப்பிடி கல்லுப்பை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி வையுங்கள். பிறகு உங்களின் குலதெய்வத்திற்கு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த முடிச்சை உங்கள் வீட்டின் வட மேற்கு மூளையில் வைத்து விடுங்கள். பிறகு 48 நாட்கள் கழித்து, உப்பை தண்ணீரில் கரைத்து விடலாம். 

இப்படி செய்தால், போதும் உங்களுக்கு நடந்த கெட்ட சம்பவத்திற்கும், உப்பு கொட்டிய சம்பவத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. இயற்கையாகவே சில விஷயங்கள் நடக்கும்.  அதை நினைத்து எதிர்மறையாகவே நாம் சிந்தனை கொள்ள வேண்டாம். எல்லாமே கடவுளின் செயல் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். 

இந்த ஒரு பொருளை கலந்து வீடு துடைத்து பாருங்கள்..கரப்பான், பல்லி,எறும்பை விரட்டி, அழுக்கை போக்கி நறுமணம் வீசும்

click me!