இப்படி 'வாக்கிங்' போறது தெரியுமா? உடலை இரும்பாக்கும் '4' முறைகள்!! 

Walking Types : வெவ்வேறு வகையான வாக்கிங் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் இந்தப் பதிவில் காணலாம். 

இப்படி 'வாக்கிங்' போறது தெரியுமா? உடலை இரும்பாக்கும் '4' முறைகள்

நடைப்பயிற்சி உடல் எடையை குறைக்க உதவும் எளிமையான பயிற்சியாகும்.  தினமும் நடைபயிற்சி செய்பவர்களுக்கு உடல் ஆரோக்கியத்திற்கான பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இந்த பயிற்சியை மேற்கொள்ள எந்த கருவிகளும் தேவையில்லை. தினமும் உடலை ஏதோவொரு இயக்கத்தில் வைத்திருப்பவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும். நடைபயிற்சியில் சில வகைகள் உள்ளன. அவைகள் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் இந்த பதிவில் காணலாம்.

walking types in tamil

நோர்டிக் வாக்கிங்: 

இந்த பயிற்சி பின்லாந்தில் பிரபலமானது. மூட்டு பிரச்சினைகள் இருப்பவர்கள் நோர்டிக் வாக்கிங் சென்றால் மூட்டுகள் வலியிலிருந்து மீளும். ஏதேனும் காயங்களில் இருந்து மீண்டவர்கள் இந்த முறையில் நடக்கலாம்.  இந்த பயிற்சி பனிச் சறுக்கு விளையாட்டு போன்றது.  பொதுவாக பனிச்சறுக்கு செய்பவர்கள் கையில் இரண்டு கம்பங்களை வைத்திருப்பார்கள். நோர்டிக் வாக்கிங் முறையில் அதைப் போலவே வடிவமைக்கப்பட்ட கம்பங்களை வைத்து நடக்க வேண்டும். அதைக் கொண்டு நடக்கும்போது மேல் உடலும், கீழ் உடலுடன் நன்கு செயல்பட்டு முழு உடல் பயிற்சியாக இருக்கும். நாம் சாதாரணமாக நடப்பதைவிடவும் 40% வரை அதிக கலோரிகளை எரிக்க நோர்டிக் வாக்கிங் உதவுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பயிற்சி மேற்கொள்ளலாம். இதற்கான கருவிகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. 


Walking benefits in tamil

பவர் வாக்கிங்: சுறுசுறுப்பாக அதே நேரம் வேகமாக நடப்பதை பவர் வாக்கிங் என்பார்கள்.  இது மூட்டுகள் தாக்கத்தைக் குறைக்கும். கடினமான பயிற்சி அல்லாமல் இதயத்தை பலப்படுத்தும் பயிற்சியாக இது உள்ளது. உடலில் சகிப்புத்தன்மையை மேம்படுத்த பவர் வாக்கிங் செய்யலாம். கால்கள், பிட்டம், முதுகு, வயிற்றின் மையப்பகுதி தசைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வலுப்படுத்த பவர் வாக்கிங்  உதவுகிறது. உங்களுடைய வயிற்றின் மையப்பகுதியை ஈடுபடுத்தி வேகமாக நடக்கும் போது இதனுடைய பலன்களை முழுமையாக பெற முடியும். 

இதையும் படிங்க: எடையை குறைக்க எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?

Walking styles in tamil

மனப்பூர்வமான நடைபயிற்சி:  

மன அழுத்தத்தை குறைப்பதற்கு நடைபயிற்சி செய்யலாம். ஆனால் நடக்கும்போது மனதை ஒருநிலைப்படுத்தி மனப்பூர்வமாக நடப்பதால் மனநிலையை சீராக்க முடியும். இந்த வாக்கிங் முறையில் நிகழ்காலத்தில் கவனம் செலுத்தி நடப்பது, உணர்வுகளை கவனம் செலுத்துவது, சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்ப்பது என செய்யும் செயலை மனப்பூர்வமாக செய்ய வேண்டும். மனநிலையை மேம்படுத்துவதன் மூலம் உங்களுடைய பல நோய்களை குணப்படுத்த முடியும். நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்தி முழு மனதுடன் நடக்கும் போது உங்களுடைய தோரணையும் மாறும். தோற்றம் அழகாகும். 

இதையும் படிங்க:  தரையை விட தண்ணீர்ல நடந்தால் '2' மடங்கு நன்மைகள்.. எப்படி நடக்கனும் தெரியுமா? 

walking tips in tamil

எடையுடன் வாக்கிங்: 

நடைபயிற்சிக்கு கூடுதல் பலனை வழங்க எடைகளுடன் நடக்கலாம். எடை கொண்ட வெஸ்ட் பெல்ட் அணிந்து விறுவிறுப்பான வேகத்துடன் நடக்க வேண்டும் அல்லது அதிக நேரம் நடக்க வேண்டும்.  இந்த பயிற்சியால் தசைகளை அதிகமாக உழைக்கும். இப்பயிற்சி எடையை குறைக்க உதவுகிறது.  வயிற்றின் மையம், கால்கள், முதுகு வலுவாகும். உங்களுடைய எடையில் 10 சதவீதத்திற்கு மேல் எடையுடன் நடைபயிற்சி செய்யலாம். அனுபவம் கூடும்போது அப்படியே எடையை அதிகரிக்கலாம்.

Walking for health in tamil

எந்த நடைபயிற்சியாக இருந்தாலும் அதனை தினமும் செய்யும்போது தான் உங்களுக்கு முழு பலன்களும் கிடைக்கும். ஏதோ ஒரு நாள் நடந்ததால் எடை கட்டுப்பாடும், இதயம் வலுப்பெறுவதும் சாத்தியம் இல்லை. நீங்கள் அவ்வப்போது நடப்பது உங்களுடைய மனநிலையை சீராக வைத்திருக்க உதவுமே தவிர நீண்டகால பயன்களை தராது. அதனால் தினம் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்களுடைய ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

Latest Videos

click me!