காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஆயில் புல்லிங்.. வெறும் 5 நிமிடம் செய்வதால் இவ்ளோ நன்மை இருக்கா?

First Published | Mar 2, 2023, 7:10 AM IST

ஆயில் புல்லிங் என்றால் என்ன? எப்படி செய்தால் மொத்த பலனும் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம். 

நாள்தோறும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவதை தான் நாம் செய்து வருகிறோம். ஆனால் பல் துலக்கியதும் வாய் கொப்பளித்து விட்டு அப்படியே அடுத்த வேலையை பார்க்க போய்விடுவோம். ஆனால் அப்படி செய்யாமல் வெறும் வயிற்றில் வாயில் எண்ணெய் ஊற்றி ஒரு 10 நிமிடம் நன்கு கொப்பளிக்க வேண்டும். இதற்கு 10 மி.லி நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். இதைத்தான் ஆயில் புல்லிங் என்கிறார்கள். 

வாயில் எண்ணெய்யை வைத்து கொப்பளிப்பது போல நன்கு வாயை பயன்படுத்தவேண்டும். இந்த எண்ணெயை 10 நிமிடம் கழித்து கீழே துப்பி விட்டு, அதன் பின் பல் தேய்த்து கொள்ளுங்கள். இதை செய்வதால் உங்களுக்கு பல நன்மைகள் உண்டு.

Tap to resize

ஆயில் புல்லிங் செய்வதால் பல் ஈறுகள் பலப்படும். பல் தொடர்பான நோய்கள் குறையும். உங்களுடைய சருமம் கூட பளபளப்பாகும். உடலுக்கு கேடு செய்யும் கிருமிகள் வெளியாகும். 

இதையும் படிங்க: தாங்க முடியாத குதிகால் வலி எரிச்சல் எல்லாமே ஒரு நொடியில் போக பாட்டி வைத்தியம்..!

தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்தால் மூட்டுவலி, இடுப்பு வலி ஆகியவை வராது. முகத்தில் ஏற்படும் பருக்கள் கூட குறையும். இதனை வயது வரம்பின்றி எல்லோரும் செய்யலாம். 

ஆயுள் புல்லிங் செய்வதால் சிலருக்கு ஒவ்வாமை வரலாம். அப்போது எண்ணெய் பிராண்டை மாற்றி பார்க்கலாம். அதன் பிறகும் ஏற்பட்டால் தவிர்க்கலாம். தவறுதலாக ஆயில் புல்லிங் செய்யும்போது எண்ணெயை விழுங்கிவிட்டால் பயம் வேண்டாம். பெரிய பாதிப்பு வராது. 

ஆயுள் புல்லிங் தினமும் செய்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். உடலில் ஆற்றல் அதிகமாகி நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கலாம். ஒற்றை தலைவலி பிரச்சனை இருந்தால் கூட குணமாகுமாம். 

இதையும் படிங்க: பிரிட்ஜில் தவறுதலாக கூட வைக்கக்கூடாத உணவுகள்.. மீறி வைத்தால் மொத்த சத்தும் காலி..!

Latest Videos

click me!