பிரிட்ஜில் வைத்தால் சுவையை இழக்கும் உணவுகள் ஏராளம். அதுமட்டுமின்றி இதனால் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் தரமும் குறைகிறது. பிரிட்ஜ் நமக்கு பிடித்த உணவுகளை கெட்டுப்போகாமல் தடுக்கிறது. ஆனாலும் எந்த மாதிரியானவற்றை அதில் வைக்கக் கூடாது என்பது அனைவருக்கும் தெரிவதில்லை. அதை இங்கு காணலாம்.
வாழைப்பழங்கள்
வாழைப்பழங்கள் நன்கு பழுக்க அவற்றை அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும். அதன் மீது காற்று மற்றும் ஒளிபட்டால் அழுகாமல் இருக்கும். இதனை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
தக்காளி
தக்காளி சமையலில் பயன்படுகிறது. இதனை பிரிட்ஜில் வைப்பதற்குப் பதிலாக, சமையலறையில் உள்ள மேசையில் வைப்பது நல்லது. காற்றோட்டமாக கூடைகளில் வைத்தால் போதும்.
தேன்
பிரிட்ஜில் ஒரு ஜாடி தேன் வைத்திருந்தால், அது கட்டியாகிவிடும். இயற்கையில் கெடாத தன்மை கொண்டது தேன். தேனை அசல் சுவையில் ருசிக்க அதனை கண்ணாடி கொள்கலனில் வைத்து வீட்டின் குளிர்ந்த, இருண்ட இடத்தில் வைத்தால் போதும்.
வெங்காயம்
நறுக்காத வெங்காயம் என்றால், சமையலறையில் வையுங்கள். ஆனால் இவற்றை மற்ற உணவுக்கு அருகில் வைக்காதீர்கள். வெங்காயத்தை பிரிட்ஜில் வைத்தால் சீக்கிரம் கெட்டுபோய்விடும்.
துளசி மாதிரியான மூலிகைகளை பிரிட்ஜில் வைத்திருப்பது அவற்றின் சுவையை கெடுத்து, அவற்றை உலர்த்துகிறது. நேரடி சூரிய ஒளி இல்லாத சமையலறையில் அவற்றை வைப்பது நல்லது. தண்ணீரில் நனைத்த வேர்களைக் கொண்ட கண்ணாடி கொள்கலனில் வைக்கவும். நீரின் வெப்பநிலையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: கருஞ்சீரகம் இப்படி சாப்பிட்டு பாருங்க.. இறப்பை தவிர எல்லா நோய்களுக்கும் தீர்வு.. அட யாரு சொன்ன தெரியுமா?