castor oil
ஆமணக்கு எண்ணெய்:
விளக்கெண்ணெய், மலச்சிக்கலைப் போக்க அமைதியான மலமிளக்கி. இதில், உள்ள ரிசினோலிக் அமிலம் மலச்சிக்கலைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், குடலின் அசைவுகளை அதிகரிக்க உதவும். எனவே, மலச்சிக்கலை நீக்க 10 முதல் 15 மில்லி ஆமணக்கு எண்ணெய் போதும். விளக்கெண்ணெயை மலமிளக்கியாகக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உபயோகிக்கலாம்.நிறைய தண்ணீர் மற்றும் மோரை அவ்வப்போது குடித்து வந்தாலும், மலச்சிக்கல் குணமாகும்.
Constipation:
நெய்:
நெய் மலச்சிக்கலைப் போக்க வல்லது. நெய் நம் உடலை மற்றும் குடல் பாதையை சுத்தமாக வைத்திருக்கும். எனவே, மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அன்றாடம் உணவில் நெய்யை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Constipation:
சூடான பானங்கள்
நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகுறீர்கள் என்றால், காபி குடிப்பது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
நார்சத்து கொண்ட உணவுகள்:
நார்ச்சத்து கொண்ட உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது..நார்த்தன்மை நிறைந்த காய்கள், வாழை, பப்பாளி, திராட்சை போன்ற பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த உணவுகள் நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, செரிமானத்தைச் சிறப்பாக்கக்கூடியவை.