
தற்போது மாறி இருக்கும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் காரணமாக நாம் ஒவ்வொருவரின் நாளும் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இதனால் நம்முடைய உடலில் பல மாற்றங்களை சந்திக்கிறோம்.
அந்தவகையில், நாம் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனைகளில் ஒன்று தலைவலி. தலைவலி வந்தாலே அந்நாள் முழுவதும் எந்த ஒரு வேலையையும் நம்மால் செய்யவே முடியாது அந்த அளவிற்கு தலைவலியானது மிகவும் கடுமையான வேதனையைக் கொடுக்கும்.
மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக இல்லாத போது, மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, தூக்கமின்மை நீரிழப்பு இரவு முழுவதும் தூங்காமல் நீண்ட நேரம் வேலை பார்ப்பது உள்ளிட்ட பல தலைவலி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். சில நேரங்களில் மருத்துவ காரணங்களால் கூட தலைவலி ஏற்படக்கூடும்.
தலைவலிக்கு சிலர் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது வழக்கமாக கொண்டுள்ளனர். இருப்பினும் அவை வலியை குறித்து உடனே நிவாரணம் அளிக்காது. மேலும் சில நேரங்களில் சில மருந்துகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளும் போது அவை சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே தலைவலிக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது தான் மிகவும் நல்லது.
பொதுவாக, தலைவலியில் ஒற்றைத் தலைவலி சாதாரண தலைவலி என்ற இரண்டு வகைகள் உள்ளன. அந்த வகையில் ஒரு சிலருக்கு தலையின் வலது பக்கத்தில் வலி அதிகமாக ஏற்படும் இந்த தலைவலிக்கு பல்வேறு காரணங்கள் சொல்லலாம். பொதுவான தூண்டுதல்கள் முதல் மிகவும் தீவிரமான மருத்துவர் நிலைகள் வரை என்று. ஆனால் சாத்தியமான காரணங்களை கண்டறிந்து வலிக்கான சிகிச்சை அளித்து வலியை குறைக்கலாம். எனவே வலது பக்கத்தில் தலைவலி வருவது ஏன்? அதற்கான பொதுவான காரணங்கள் என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
தலையின் வலது பக்கத்தில் வலி ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் :
டென்ஷன் தலைவலி : டென்ஷனல் வரும் தலைவலி உங்கள் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் அளவுக்கு மிகவும் கடுமையானவை அல்ல. பொதுவாக இந்த தலைவலி பெண்களிடம் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர் இந்த தலைவலி ஆனது பதட்டம் மற்றும் ஒற்றை தலைவலியால் ஏற்படலாம்.
லேசான மற்றும் மிதமான வலியின் அறிகுறிகள்:
பெரும்பாலும் தலையை சுற்றி இறுக்கமாக இருப்பது மன அழுத்தம் மோசமான தோரணை கழுத்து மற்றும் தோள்களின் தசை வலி ஆகியவை.
ஒற்றைத் தலைவலி:
கடுமையான வலி, அடிக்கடி குமட்டல் வாந்தி மற்றும் ஒளி அல்லது ஒளி உணர்திறன் ஆகியவை ஏற்படலாம். ஹார்மோன் மற்றும் சில உணவுகள் மோசமான மன அழுத்தம் சுற்றுச்சூழல் காரணிகள் போன்றவையே இதற்கு முக்கிய காரணமாகும். இதை சரி செய்ய பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
கிளஸ்டர் தலைவலி:
இந்த தலைவலியானது கண்ணை சுற்றி கடுமையான எரிச்சல் அல்லது வலி ஏற்படும். இது தலையின் மற்றும் பகுதிகளுக்கும் பரவும். பெரும்பாலும் கண்களில் சிவத்தல் அல்லது நீர் வடிதல், நாசி எரிச்சல் ஆகியவை சில அறிகுறிகள் ஆகும். ஆல்கஹால் புகை பிடித்தல் மற்றும் சில மருந்துகள் போன்றவை தூண்டுதல்களால் இது நிகழ்கிறது. பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், ஆக்சிஜன் சிகிச்சை மற்றும் தூண்டுதல்களை தவிர்ப்பதன் மூலம் இதை சரி செய்யலாம்.
சைனஸ் பிரச்சினை:
சைனஸ் பிரச்சினைகள் கூட தலையின் வலது பக்கத்தில் வலி ஏற்படுகிறது. பெரும்பாலும் இது நாசியில் எரிச்சலை ஏற்படுத்தும். இதன் மூலம் இந்த பிரச்சனையை சுலபமாக கண்டறிந்து அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டால் நல்லது.
இதையும் படிங்க: அடிக்கடி தலைவலி தைலம் தடவினால் நல்லதா? கெட்டதா? உண்மை என்ன?
தீவிர காரணங்கள் :
கடுமையான தலைவலி உச்சன் தலையின் மேன்மை தாலி வலியும் மற்றும் சில நேரங்களில் பார்வை பிரச்சனை போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
மேலும் தலையில் உள்ள தம்பிகளில் வீக்கம் ஏற்படும்.
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?
திடீர் கடுமையான தலைவலி, தலையில் காயம் ஏற்பட்டால் அதனால் தொடர்ந்து தலைவலி வருவது, தொடர்ந்து அல்லது மோசமான தலைவலி, தலைவலியுடன் காய்ச்சல் கடினமான கழுத்து, அல்லது பார்வை மங்குதல் ஆகியவை ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.
குறிப்பு : மேலே சொன்னபடி பொதுவான ஒற்றை தலைவலி டென்ஷன் தலைவலி அல்லது மூளை கட்டிகள் போன்ற தீவிரமான பிரச்சனைகளால் தலையின் வலது பக்கத்தில் தலைவலி ஏற்படலாம். அறிகுறிகள் மற்றும் சாத்தியமான காரணங்கள் வைத்து தலைவலிக்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.
இதையும் படிங்க: Exercise செய்த பிறகு தலைவலி வருதா..? காரணம் இதுதாங்க..!