
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு அவனது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு எதுவென்றால் அது இதயம் தான். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அந்தவகையில், இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பால் இருப்போரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன், ரத்த கொதிப்பு, ரத்த கொழுப்பு ரத்த சர்க்கரை போன்றவை ஆகும். அதிலும் குறிப்பாக இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் கெட்ட கொழுப்புகள் படிந்து ரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்துவதால் மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணமாகிறது. இப்படி ரத்தக்குழாயில் கெட்ட கொழுப்புகள் தங்குவதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதும் தான்.
இப்படி இரத்தக் குழாயில் படிந்து இருக்கும் கெட்ட கொழுப்புகளை சில பழங்களை சாப்பிடுவதன் மூலம் அவற்றை சுலபமாக அகற்றி விடலாம். ஆம், உண்மையில் தினமும் நாம் ஒரு சில பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். இதனால் ரத்தக்குழாய் சுத்தமாக இருக்கும். மாரடைப்பு வரும் அபாயத்தையும் மிகவும் எளிதாக தடுத்து விடலாம்.
அந்த வகையில் இப்போது இந்த பதிவு இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒருசில பழங்கள் பற்றி இங்கு நாம் பார்க்கலாம். அவை..
இதையும் படிங்க: இதய நோயாளிகளுக்கு சிறந்த சமையல் எண்ணெய்கள் இவை தான்!
இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் பழங்கள் :
1. ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வாருங்கள் என்று மருத்துவர்கள் அடிக்கடி சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆம் உண்மையில்,தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்களின் அளவு குறைந்து மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்கும். எனவே மாரடைப்பு வரக்கூடாதெனில், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்.
2. கொய்யா
கொய்யாவில் ஆப்பிளிக்கு இணையான சத்துக்கள் உள்ளன. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இதயத்திற்கு செல்லும் தமனிகளில் பிளேக்குகள் தடுக்க பெரிதும் உதவுகின்றது. எனவே மாரடைப்பு வரக்கூடாது என்று நீங்கள் நினைத்தால் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வாருங்கள்.
இதையும் படிங்க: "இதயத்தை பாதிக்கும் பேராபத்து" 40 வயதை கடந்த ஆண்கள் கட்டாயம் கவனிக்கணும் - உங்கள் உடலே கொடுக்கும் அலர்ட்!
3. மாதுளை
மாதுளை பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது மட்டுமின்றி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்க பெரிதும் உதவுகின்றது. ஆகவே, தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவாக இருக்கும். முயற்சி செய்துதான் பாருங்களேன்.
4. ஆரஞ்சு
ஆரஞ்சு சிட்ரஸ் பழங்களில் ஒன்றாகும். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இவை இரண்டும் இதயத்திற்கு செல்லும் தமனிகளில் பிளேக்குகள் உருவாவதை தடுப்பது மட்டுமின்றி, கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உதவுகின்றது. ஆகவே உங்களால் முடிந்த அளவுக்கு ஆரஞ்சு பழங்களை அவ்வப்போது வாங்கி சாப்பிடுங்கள்.
5. திராட்சை
திராட்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாகவே உள்ளன. நீங்கள் திராட்சையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு அபாயத்தை தடுக்கலாம்.
6. பெர்ரி
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி என பெர்ரி பழங்களில் பல வகைகள் உள்ளன. இவை அனைத்திலும் ஆன்ட்டி ஆக்ஸடென்ட்கள் அதிகமாகவே உள்ளது. இது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், ரத்தக்குழாய்களில் பிளேக்குகள் உருவாவதை தடுக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உங்களால் முடிந்தால் அவ்வப்போது பெர்ரி பழங்களை வாங்கி சாப்பிடுங்கள்.
7. பப்பாளி
அனைத்து பருவ காலத்திலும் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்றுதான் பப்பாளி. இதில் வைட்டமின் சி மற்றும் பாப்பைன் உள்ளது. இவை இரண்டும் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்யாமல் தடுக்கும் மற்றும் ரத்தக்குழாய்களில் பிளேக்குகள் உருவாவதை தடுக்கும். எனவே இந்த பழத்தையும் நீங்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு அபாயத்தை தடுக்கலாம்.
முக்கிய குறிப்பு :
மேலே சொன்ன பழங்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு மாரடைப்பு வரவே வராது!!