
உடற்பயிற்சி என்ற வார்த்தை தற்போது நம் சாப்பிடும் உணவின் முக்கியத்துவத்தை விட மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் நாம் கம்ப்யூட்டர் முன்பாக அதிக நேரம் செலவிடும் வேலை செய்கிறோம். இதுதவிர, செல்போன் மற்றும் டிவியையும் அதிக நேரம் பயன்படுத்துகிறோம். இப்படிப்பட்ட மோசமான வாழ்க்கையை தான் நம்மில் பெரும்பாலானோர் வாழ்கின்றனர்.
உடற்பயிற்சி செய்வதினால் தசைகளில் அசைவை ஏற்படுத்தி உடலில் இருக்கும் தேவையற்ற கலோரிகளை எரிக்க உதவுகின்றது. நடைப்பயிற்சி, சைக்கிள், ஓடுதல், நீச்சல் என உடற்பயிற்சியில் பல வகைகள்கள் உள்ளன. உடற்பயிற்சியை காலை அல்லது மாலை செய்யலாம். ஆனால் பொதுவாக பெரும்பாலானோர் காலையில் தான் உடற்பயிற்சி செய்ய விரும்புவார்கள். நாம் தினமும் காலை உடற்பயிற்சி செய்து வந்தால் உடலுக்கு எக்கச்சக்கமான நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம்.
பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் In-door உடற்பயிற்சி செய்வதில் தான் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். In-door என்பது ஜிம் அல்லது உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சி செய்வதாகும். ஆனால் இப்படி நான்கு சுவர்களுகுள்ளே இருந்து உடற்பயிற்சி செய்வதை பார்க்கிலும் விளையாட்டு மைதானம், பார்க், பீச் போன்ற இடங்களில் இயற்கை காற்றை சுவாசித்தபடியே திறந்தவெளியில் (Out-door) உடற்பயிற்சி செய்து வந்தால் அதன் பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும்.
திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்வதினால் நம்முடைய உடல் நலம் மட்டுமின்றி, மனநலத்தையும் பெரிதும் காக்கும். அந்த வகையில் இப்போது திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்து வந்தால் மன நலம் காக்க நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் :
1. திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்து வந்தால் நம் உடலுக்கு அதிக அளவு புத்துணர்ச்சி கிடைக்கும். இதன் மூலம் ஒரு தனித்துவமான மன ஆரோக்கியத்தை பெறலாம். சொல்லப் போனால் திறந்து வெளி உடற்பயிற்சி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஒரு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இதை நாம் உணரவும் முடியும்.
2. திறந்தவெளி உடற்பயிற்சியானது நம் உடலில் என்டார்ஃபின் என்னும் ஃபீல் குட் என்ற ஹார்மோன் உற்பத்தியின் அளவை அதிகரிக்க செய்ய பெரிதும் உதவுகின்றது. இந்த ஹார்மோன் அதிகரிப்பால் நம்முடைய மன நிலையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பதால், நாம் எப்போதுமே மகிழ்ச்சியாகவே இருக்க முடியும்.
3. திறந்தவெளி உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளையின் செயல்பாடு கூர்மையாக ஈடுபடும். இதனால் நம்முடைய நினைவாற்றலானது அதிகரிக்கும். அதுமட்டுமின்றி நம்முள் இருக்கும் படைப்பாற்றலை ஊக்குவிக்க இது பெரிதும் உதவுகின்றது.
4. திறந்தவெளி உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில் இருக்கும் ஸ்ட்ரெஸ்ஸீடன் தொடர்புடைய கார்ட்டிசா என்ற ஹார்மோன் உற்பத்தியின் அளவை கட்டுக்குள் வைக்க முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் மன அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது. மேலும் மனதிற்கு அமைதியான உணர்வை தூண்ட உதவுகின்றது.
இதையும் படிங்க: கொழு கொழு கன்னங்களை மெலிந்த தோற்றத்திற்கு கொண்டு வர 'இதை' மட்டும் பண்ணுங்க!!
5. திறந்தவெளி உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் இரவல் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அதாவது நம்முடைய மூளையும் உடலும் ஒன்றாக இணைந்து செயல் புரிந்து நம் உடலுக்கு தேவையான ஓய்வை கொடுக்கும் மற்றும் நம்மை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும். மேலும் திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்யும் போது நம்முடைய உடலில் படும் இயற்கை வெளிச்சத்தால் மூளையின் செயல்பாட்டை மாற்றி அமைத்து, அவற்றின் மூலம் நல்ல தூக்கம் பெற உதவுகின்றது. இது தவிர, திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்யும் போது பலதரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பு சுலபமாக கிடைக்கும்.
மேலே சொன்ன நன்மைகளை நீங்கள் பெற விரும்பினால், இயற்கை காற்றோட்டத்தில் திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்வதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்!!
இதையும் படிங்க: உடற்பயிற்சி செய்த பின் இந்த ஒரு தப்ப மட்டும் பண்ணாதீங்க.. இல்லனா பிரச்சினை தான்!