Bear Attack: இறந்த மாதிரி நடித்தால் கரடியிடம் தப்பிக்கலாமா? வனவிலங்கு நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

Published : Jul 19, 2026, 02:04 PM IST

Bear Attack: பாபநாசம் பகுதிகளில் கரடிகளின் தொல்லை அதிகரிக்கும் நிலையில், கரடி துரத்தினால் இறந்த மாதிரி நடித்தால் தப்பிக்கலாம் என கட்டுக்கதைகள் உலா வருகிறது. இது உண்மையா? கரடியை சந்தித்தால் என்ன செய்ய வேண்டும்? என இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
கரடி துரத்தினால் இறந்த மாதிரி நடித்தால் தப்பிக்கலாமா?

பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடிகளின் அட்டகாசம் இருந்து வந்தது. கோயில்களுக்கு புகுந்து எண்ணெய் குடித்து வந்த கரடிகள் பொதுமக்கள் சிலரையும் தாக்கிய சம்பவங்கள் நடந்தன. 

இதனைத் தொடர்ந்து வ‌னத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டுகளில் இரண்டு கரடிகளை வெற்றிகரமாகப் பிடித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சற்றே நிம்மதியடைந்திருந்தாலும், கரடிகள் நடமாடும் பகுதிகளில் மக்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.

நீங்கள் கேட்ட சினிமா கதைகள் உண்மையா?

சிறுவயதில் நாம் கேட்ட கதைகளிலும், சினிமாக்களிலும் கரடி துரத்தினால் மூச்சை அடக்கிக்கொண்டு இறந்த மாதிரி படுத்துக்கொண்டால் தப்பித்துவிடலாம் என்று காட்டியிருப்பார்கள். ஆனால், நிஜமாகவே அப்படிச் செய்தால் கரடியிடமிருந்து தப்பிக்க முடியுமா? காடுகளுக்கு அருகாமையில் வாழும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள் என்ன? வனவிலங்கு நிபுணர்கள் கூறுவதைப் பார்ப்போம்.

24
வனவிலங்கு நிபுணர்கள் சொல்வது என்ன?

நம்மில் பலர் நம்பிக் கொண்டிருக்கும் இந்த 'இறந்த மாதிரி நடிக்கும்' தந்திரம் நிஜ வாழ்க்கையில் பெரும்பாலும் வேலைக்கு ஆகாது என்பதே கசப்பான உண்மை. அதற்கு முக்கிய காரணங்கள்:

அதிசக்தி வாய்ந்த வாசனை மற்றும் கேட்கும் திறன்: கரடிகளுக்கு மோப்ப சக்தியும், கேட்கும் திறனும் மனிதர்களை விட பல மடங்கு அதிகம். நாம் மூச்சை அடக்கிக் கொண்டு படுத்திருந்தாலும், நமது உடலின் வாசனை, இதயத் துடிப்பு மற்றும் மிகச்சிறிய அசைவுகளைக் கூட அதனால் எளிதாகக் கண்டறிந்துவிட முடியும்.

உணவாகப் பார்க்கும் குணம்: கரடிகள் சில சமயம் இறந்த விலங்குகளின் உடல்களையும் உண்ணும் பழக்கம் கொண்டவை. எனவே, நீங்கள் செத்த மாதிரி படுத்திருந்தால், அது உங்களை எளிதான இரையாக நினைத்து தாக்கத் தொடங்கிவிடும். கரடி இனங்களுக்கு ஏற்ப மாறும் தற்காப்பு முறைகள் வனவிலங்கு நிபுணர்களின் கூற்றுப்படி, அனைத்து கரடிகளும் ஒரே மாதிரியானவை அல்ல. நாம் எதிர்கொள்ளும் கரடியின் வகையைப் பொறுத்து நமது தற்காப்பு முறை மாற வேண்டும்.

34
கரடிகளின் வகைகளை பொறுத்து குணம் மாறும்

கருங்கரடி (Black Bear) மற்றும் பழுப்பு கரடி (Brown Bear): இந்தியாவில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான நமது பாபநாசம் போன்ற இடங்களில்) காணப்படும் கரடிகள் பெரும்பாலும் இந்த வகையைச் சேர்ந்தவை. இவற்றின் முன்னால் ஒருபோதும் செத்த மாதிரி நடிக்கக் கூடாது. ஏனெனில், இவை தாக்குதலை நிறுத்தாது.

கிரிஸ்லி கரடி (Grizzly Bear): இந்த வகை கரடிகள், தங்களுக்கு அல்லது தங்களின் குட்டிகளுக்கு உங்களால் ஆபத்து என்று நினைத்து தற்காப்புக்காகத் தாக்க வரும்போது மட்டும், "நாம் ஒரு அச்சுறுத்தல் இல்லை" என்பதைக் காட்ட செத்த மாதிரி படுப்பது சில நேரங்களில் வேலை செய்யும். ஆனால், அதுவும் அந்த நேரத்து சூழ்நிலையைப் பொறுத்தது.

44
கரடியைச் நேருக்கு நேர் சந்தித்தால் என்ன செய்ய வேண்டும்?

பாபநாசம் போன்ற வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் வசிப்பவர்கள் மற்றும் தோட்ட வேலைக்குச் செல்பவர்கள் பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்:

சத்தமிட்டுக் கொண்டே செல்லுங்கள்: கரடிகள் பொதுவாக மனிதர்களைத் தானாக வந்து தாக்க விரும்புவதில்லை. நாம் திடீரென அதன் முன்னால் போய் நிற்பதால்தான் பயந்து போய் தாக்குகின்றன. எனவே, காடுகளுக்கு அருகில் செல்லும்போது பேசிக்கொண்டோ அல்லது சத்தம் எழுப்பிக்கொண்டோ சென்றால், கரடிகள் உங்களை உஷாராகத் தவிர்த்துவிட்டுப் போய்விடும்.

நேராகக் கண்ணைப் பார்க்காதீர்கள்: கரடியின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்க்கவும். ஏனெனில், அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அது உங்களைத் தாக்க வரலாம்.

ஓடாதீர்கள்: கரடிகள் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் ஓடக்கூடியவை. நீங்கள் ஓடினால் உங்களை இரை என நினைத்து துரத்தத் தொடங்கும். எனவே, மெதுவாகப் பின்னோக்கி நகர வேண்டும்.

உடலை பெரிதாகக் காட்டுங்கள்: உங்களது கைகளை மேலே தூக்கியோ அல்லது உங்களிடம் இருக்கும் கோட், துண்டு போன்றவற்றை விரித்தோ உங்களை ஒரு பெரிய உருவமாக கரடிக்குக் காட்ட முயலுங்கள். அது பயந்து பின்வாங்க வாய்ப்புண்டு.

ஆகவே கரடிகள் குறித்த பரவலான மூடநம்பிக்கைகளை நம்பாமல், வனவிலங்கு நிபுணர்களின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதே நமது உயிரைக் காக்கும் புத்திசாலித்தனமாகும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories