Strict Littering Fines and Punishments in the USA: நம்ம ஊர்ல ரோட்ல குப்பை போடுறது, எச்சில் துப்புறதெல்லாம் சகஜம். ஆனா, அமெரிக்காவுல தெரியாத்தனமா ஒரு சின்ன பேப்பர் போட்டா கூட என்ன நடக்கும் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
இந்தியா போன்ற நாடுகளில் ரோட்டில் குப்பை போடுவது சாதாரணம். ஆனால் அமெரிக்காவில், ஒரு சின்ன சிகரெட் துண்டையோ, பேப்பரையோ ரோட்டில் வீசினாலும் அது 'லிட்டரிங்' என்ற சட்டப்படி குற்றம்.
அமெரிக்காவின் எல்லா சாலைகளிலும் 'No Littering' போர்டுகள் இருக்கும். டெக்சாஸில் 'Don't Mess with Texas' என்ற வாசகமே பிரபலம். நவீன CCTV கேமராக்கள், காரில் இருந்து குப்பை வீசினால் வண்டி நம்பருடன் பதிவு செய்து, அபராத சீட்டை வீட்டிற்கு அனுப்பிவிடும்.
அமெரிக்காவில் குப்பை போட்டால் விதிக்கப்படும் அபராதம் ஒவ்வொரு மாகாணத்திலும் மாறும். முதல்முறைக்கு $250 முதல் $500 வரை (சுமார் ₹45,000) அபராதம். கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க் போன்ற மாகாணங்களில் $1,000 (சுமார் ₹84,000) வரை போகும். அதிகபட்சமாக $2,000 (சுமார் ₹1.6 லட்சம்) கூட விதிக்கப்படலாம்.
வெறும் அபராதத்துடன் தப்பிக்க முடியாது. மீண்டும் மீண்டும் தப்பு செய்தால், 'கம்யூனிட்டி சர்வீஸ்' தண்டனையாக, குறிப்பிட்ட மணிநேரம் நீங்களே ரோட்டை சுத்தம் செய்ய வேண்டும். சில சமயம் சில மாதங்கள் சிறைத் தண்டனையும் கிடைக்கலாம்.
அமெரிக்க சாலைகள் பளிங்கு போல இருக்க காரணம் கடுமையான சட்டங்கள், தொடர் கண்காணிப்பு மட்டுமல்ல. சட்டத்திற்கு பயந்து மக்களும் ஒழுக்கத்தை கடைபிடிக்கிறார்கள். இந்த பொறுப்புணர்வே சுத்தமான சாலைகளுக்கு முக்கிய காரணம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.