- வழக்கமான இஞ்சியில் இருக்கும் ஊட்டச்சத்தை விட முளைவிட்ட இஞ்சியில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாகவே இருக்கும். ஆனால் நீண்ட நாள் முளைவிட்டதாக இருக்காமல், புதிதாக முளைவிட்ட இஞ்சியாக இருப்பதுதான் நல்லது. ஏனெனில் அவற்றில் தான் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக பெறமுடியும். முதிர்ந்த முளைவிட்ட இஞ்சி கசப்பு தன்மையில் இருக்கும்.
- சாதாரண இஞ்சியை போலவே முளைவிட்ட இஞ்சியும் ஜீரணக் கோளாறுகளுக்கு ரொம்பவே நல்லது. இது அஜீரண கோளாறுக்கு, குமட்டல், வாந்தி, வயிற்று உப்புசம், வாயு தொல்லை, வாய் கசப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.
- முளைவிட்டு இஞ்சியில் இருக்கும் இன்ஃபிளமேட்டரி பண்புகள் உடலில் ஏற்படும் செல் சேதங்களை தடுக்கவும், ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்து போராடவும் உதவுகிறது.
- முளைவிட்ட இஞ்சி இருக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள் செல் சேதங்களை தடுக்கும் மற்றும் அதில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் புற்றுநோய் வருவதை தடுக்கவும் உதவுகிறது.