Herbals for Lung Disease : நுரையீரல் பிரச்சனையால் அவதியா? நிரந்தர தீர்வு தரும் 5 அற்புத மூலிகைகள்

Published : Jun 26, 2025, 07:51 PM IST

நுரையீரலை சுத்தப்படுத்தவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சில மூலிகைகள் உதவுகின்றன. இந்த மூலிகைகள் நமது நுரையீரலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றன. அத்தகைய மூலிகைகள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
15
துளசி

காற்று மாசுபாடு, தூசி, வாகனப் புகை, தொழிற்சாலை புகை போன்ற பல்வேறு காரணங்களால் பலருக்கும் நுரையீரல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. நுரையீரலில் அழற்சி, நுரையீரல் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் அதிகரித்து வருகின்றன. துளசி இலைகள் சுவாச பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும். தினமும் 10 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், சுவாசப் பிரச்சனைகள் குறையும். நுரையீரலை பலப்படுத்த விரும்பினால் துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வரலாம்.

25
ஆடாதொடை

ஆடாதொடை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும். சளி அல்லது இருமல் ஏற்பட்டால் கால் தேக்கரண்டி ஆடாதொடை பொடியை சிறிது தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால், சளி குணமாகும்.

35
திப்பிலி

திப்பிலி மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, இருமல், தொண்டைப் புண் போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. திப்பிலியை எடுத்து அரை டம்ளர் பாலில் கொதிக்க வைத்து, குடித்து வந்தால் சளி, இருமல், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்றவை குணமாகும்.

45
அதிமதுரம்

அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவும் மூலிகையாகும். சிறிய அதிமதுரத் துண்டை வாயில் அடக்கி, அதன் சாற்றை விழுங்கினாலே இருமல் குறையும். அதிமதுரம் நுரையீரலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றி நுரையீரலை சுத்தம் செய்யும்.

55
கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி இலையில் நுரையீரலை சுத்தம் செய்யும் பண்புகள் ஏராளமாக உள்ளன. இது நுரையீரல் அழற்சியைக் குறைப்பதோடு, சளி தேங்குவதையும் தடுக்கும். இதை கஷாயமாக காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். இவை அனைத்தும் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க உதவும் சில மூலிகைகள் ஆகும். தீவிர நுரையீரல் பிரச்சனைகள் இருந்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும். இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் பிறருக்கும் பகிருங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories