தைராய்டு என்பது நம்முடைய உடலில் இருக்கும் தைராய்டு சுரப்பியானது தைராய்டு ஹார்மோனை சரியாக உற்பத்தி செய்ய முடியாத உடலில் இருக்கும் ஒரு பிரச்சனையாகும். இதனால் தைராய்டு ஹார்மோன் வளர்ச்சிதை மாற்றம் மோசமாக பாதிக்கப்படும். இதுதான் தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக நீங்கள் அதிகப்படியான சோர்வு, மன அழுத்தம், பதட்டம், மனசோர்வு, மெதுவான வளர்ச்சி மற்றும் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது தவிர உடலில் ஹார்மோன்களின் சமநிலையை சரியாக பராமரிக்கவும், வேகமாக வளர்ச்சிதை மாற்றம், உடல் வெப்பநிலை, ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் சிறந்த தைராய்டு செயல்பாடு மிகவும் அவசியம்.
25
Dairy and thyroid health in tamil
தைராய்டு சுரப்பி உங்களது உடலின் தேவைகளை சரியாக பூர்த்தி செய்ய போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யவில்லை என்றால் நீங்கள் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கூடுதலாக, உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். அந்த வகையில் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் பால் குடிக்கலாமா.. கூடாதா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளன. ஆனால் பெரும்பாலானோர் பால் குடிப்பது தவிர்க்கிறார்கள். காரணம் பாலில் கால்சியம் நிறைந்துள்ளதால், அது தைராய்டு மருந்துகளின் செயல்திறனை குறைக்கும் என்று நம்புகிறார்கள். அது உண்மையா.. இல்லையா. தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் பால் குடித்தால் தீங்கு ஏதேனும் ஏற்படுமா? இது போன்ற பல கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
35
Can thyroid patients drink milk in tamil
தைராய்டு உள்ளவர்கள் பால் குடிக்கலாமா?
ஆம் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் பால் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் பாலில் நல்ல அளவு வைட்டமின் டி உள்ளது. இது தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. மேலும் இதில் இருக்கும் கால்சியம் புரதம் மற்றும் அயோடின் தைராய்டு நோயாளிகளின் ஆரோக்கியத்தின் சாதகமான விளைவை ஏற்படுத்தும். எனவே தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் பால் மற்றும் பால் பொருட்களை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
45
Thyroid diet and nutrition in tamil
எப்போது குடிக்க கூடாது?
தைராய்டு மருந்தை நீங்கள் சாப்பிட்ட பிறகு உடனே பால் குடிக்க வேண்டாம். குறைந்தது 4 மணி நேரம் கழித்து தான் பால் குடிக்க வேண்டும். பால் மற்றும் பால் பொருட்களில் அதிக அளவு கால்சியம் உள்ளதால், இது தைராய்டு மருந்து உறிஞ்சும் விதத்தை பாதிக்கும். எனவே நீங்கள் தைராய்டு மருந்தை எடுத்துக் கொள்வதற்கு முன் அல்லது பின் பால் மற்றும் கால்சியம் நிறைந்த எந்தவொரு உணவுகளையும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
தைராய்டு நோயாளிகள் பால்குடிப்பது நல்லது என்றாலும் ஹைபர் தைராய்டிசம் உள்ளவர்கள் முழு கொழுப்புள்ள பாலை குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கொழுப்பு நீக்கப்பட்ட பால் அல்லது ஆர்கானிக் பாலை குடிக்கலாம்.இது ஆரோக்கியமானது மற்றும் ஜீரணிக்க எளிதாக இருக்கும்.