
சந்தனத்திற்கு ஆயுர்வேதத்திலும், ஆன்மீகத்திலும், மிக முக்கிய பங்கு உண்டு. சந்தன மரத்தின் கட்டையில் இருந்து எடுக்கப்படும் சந்தனம்... பொதுவாக இளஞ்சிவப்பு, மஞ்சள், சற்றும் வெளிர் சந்தன நிறத்தில் கிடைக்கிறது. எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்ட சந்தானம் அழகு சாதன பொருட்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
சந்தனத்திற்கு ஆயுர்வேதத்திலும், ஆன்மீகத்திலும், மிக முக்கிய பங்கு உண்டு. சந்தன மரத்தின் கட்டையில் இருந்து எடுக்கப்படும் சந்தனம்... பொதுவாக இளஞ்சிவப்பு, மஞ்சள், சற்றும் வெளிர் சந்தன நிறத்தில் கிடைக்கிறது. எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்ட சந்தானம் அழகு சாதன பொருட்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
'ஜெயிலர் 2' படத்தில் சிவராஜ் குமாருக்கு பதிலாக இந்த மாஸ் நடிகரா? வெளியான புது தகவல்!
சந்தனத்தையும் மனம், ஒருவருடைய மன அழுத்தத்தை குறைத்து, அவர்களின் மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியது. மருத்துவ குணம் நிறைந்த இந்த சந்தனத்தை, பல்வேறு விதத்தில் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தி வருகிறார்கள். காயங்கள், தழும்புகள், வீக்கம், கட்டி, மற்றும் தோல் பிரச்சனைகளுக்கு சந்தனம் ஒரு மருந்தாக செயல்பட்டு அவற்றை சரி செய்ய உதவுகிறது.
மேலும் அழகு சாதன பொருட்களிலும் சந்தனத்தின் பங்கு அதிகமாக உள்ளது. சந்தனத்தை வாரத்தில் இரு முறை முகத்தில் தேய்ப்பதன் மூலம், முகத்தில் உள்ள மங்குகள் நீங்கும். கரைகள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்துவிடும். முகம் பொலிவாகவும் அழகாகவும் இருக்க சந்தனம் உதவுகிறது. தழும்புகள் இருக்கும் இடத்தில் சந்தனத்தை போட்டால் தழும்புகள் விரைவில் குணமடையும்.
20 வருஷமா அஜித் - த்ரிஷா காம்போவை சோதிக்கும் பிரச்சனை! விடாமுயற்சியிலும் ஒர்கவுட் ஆகாத சோகம்!
அதேபோல் வாசனை திரவியங்களிலும், சந்தனத்திற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்மீக விஷயங்களிலும் சந்தானத்தின் பொடியை கொண்டே தெய்வங்களுக்கு அர்ச்சனை மற்றும் பொட்டு வைக்கப்படுகிறது. எனவே இது அனைவரும் விரும்ப கூடிய மங்களகரமான பொருள் ஆகும். சந்தனத்தை தினமும் நெற்றியில் வைத்துக் கொள்வது, சூட்டை தனித்து உஷ்ணத்தை வெளியேற்றும். மனதுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும். எனவே பலர் சந்தனத்தை நெத்தியில் வைத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் பல பலன்களை அள்ளிக்கொடுக்க கூடிய சந்தனத்தை குளிர் காலங்களில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், ஆறு மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தைகள் வைக்க கூடாது. அதே போல் தீராத சளி பிரச்சனை உள்ளவர்கள், ஆஸ்துமா பிரச்சனை உள்ளார்கள், வலிப்பு நோயாளிகள் போன்றோரும் குளிர்காலங்களில் சந்தனத்தை பயன்படுத்தக் கூடாது என கூறப்படுகிறது.
ஒரே வாரத்தில் நடந்த பிரேக்கப் - பெற்றோரை அழைத்து வந்த ஆல்யா மானசா - சஞ்சீவ் கூறிய ஷாக் தகவல்!
சந்தனம் அதிக குளிர்ச்சியை தருவதால், மழை மற்றும் பனி காலங்களில் இதனை பயன்படுத்துவது அவர்களின் சளி பிரச்சனையை தீவிரமாக மாற்றும். அதே நேரம் கோடை காலங்களில் சந்தனத்தை உடல்நிலையை பொறுத்து வைத்து கொள்ளலாம். அரிப்பு உள்ள இடங்களில் சந்தனத்தை தடவுவது சில சமயம், ஒவ்வாமையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.