Diabetes eating plan: நீரழிவு நோயாளிகளுக்கு கஞ்சி சாப்பிடுவது எந்த அளவிற்கு.. ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்?

First Published Oct 2, 2022, 2:12 PM IST

Diabetes eating plan: சமைத்து குளிரூட்டப்பட்டு மறுநாள் சாப்பிடும் சாதம், உருளைக்கிழங்கு போன்ற மாவுசத்து நிறைந்த உணவுப்பொருட்கள் சர்க்கரை நோய்யாளிகளின் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா? இல்லையா..? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

நீரிழிவு நோய் 40ஐ கடந்த வீட்டில் எவரேனும் ஒருவருக்கு வரும், உலகளாவிய நோயாக மாற துவங்கியுள்ளது. ஒருவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கு தவறான உணவு மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக இருக்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவையும் பானத்தையும் எப்போதும் கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து சிறுநீரக நோய், மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்படலாம். 

அப்படியாக சர்க்கரை நோயாளிகள் என்னென்னெ உணவுகள் சாப்பிடலாம், சாப்பிட கூடாது என்ற வரைமுறை உள்ளது. 

பொதுவாக அரிசி, உருளைக்கிழங்கு போன்று அதிக மாவுசத்து நிறைந்த பொருட்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்றும், அவ்வாறு அதனை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயரும் என்றும் நீண்ட நாட்களாகவே கூறப்பட்டு வருகிறது.  

ஆனால் தற்போதைய ஆய்வின்படி, அரிசி, உருளைக்கிழங்கு போன்று அதிக மாவுசத்து நிறைந்த உணவுகளை உண்ணுவது சர்க்கரை நோயாளிகள் நல்லது என்று கூறப்படுகிறது. அதை எப்படி சாப்பிட வேண்டுமென்றால் சமைத்த அரிசையை நாள் முழுவதும் குளிரூட்டி அதனை மறுநாள் சாப்பிடுவது நல்லது என்று கூறப்பட்டுள்ளது. 

 மேலும் படிக்க.....இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..மிதுனம், கன்னி ராசிக்கு தொழிலில் முன்னேற்றம்..உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

அதாவது, சாதத்தை அவ்வாறு குளிரூட்டும்போது அது எதிர்ப்பு தன்மை கொண்ட ஸ்டார்ச்சாக மாறிவிடுகிறது. இதனை சாப்பிடுவதால் உடலில் குளுக்கோஸின் அளவும் கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.இது கொஞ்சம் ஆச்சர்யமானதாக இருக்கும் ஆனாலும் இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், சமைத்த அரிசியை ஒரு நாள் முழுவதும் குளிர்விக்கப்படும் போது மாவுசத்தானது ஸ்டார்ச் ரெட்ரோகிரேடேஷன் எனும் நிலையை அடைகிறது, இனிதான் மூலம் எதிர்ப்பு தன்மை கொண்ட ஸ்டார்ச் உருவாகிறது.இதன் காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு எவ்வித ஆரோக்கிய குறைபாடும் ஏற்படாது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.   

 மேலும் படிக்க.....இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..மிதுனம், கன்னி ராசிக்கு தொழிலில் முன்னேற்றம்..உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

எனவே, சமைத்து குளிரூட்டப்பட்டு மறுநாள் சாப்பிடும் சாதம், உருளைக்கிழங்கு போன்ற மாவுசத்து நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 மேலும் படிக்க.....இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..மிதுனம், கன்னி ராசிக்கு தொழிலில் முன்னேற்றம்..உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

click me!